| பொருளதிகாரம் | 334 | முத்துவீரியம் |  
  
மொய்ம்மலர்க் காந்தளைப்
      பாந்தளென் றெண்ணித்துண் ணென்றொளித்துக் 
      கைம்மல ராற்கண் புதைத்துப்
      பதைக்குமெங் கார்மயிலே. (திருக். 233) 
      காடத்துணிதல் 
      என்பது, பருவநினைந்து கவலா
      நின்ற தாய்க்கு, நீ கவன்று மெலியவேண்டா, 
      யானவள் புக்க விடம்புக்குத் தேடுவேனெனக்
      கூறிச், செவிலி அவளை நாடத்துணிதல். 
      (வ-று.) 
      வேயின தோளி மெலியல்விண்
      ணோர்தக்கன் வேள்வியின்வாய்ப் 
      பாயின சீர்த்தியன் அம்பலத்
      தானைப் பழித்துமும்மைத் 
      தீயின தாற்றல் சிரங்கண் ணிழந்து
      திசைதிசைதாம் 
      போயின எல்லையெல் லாம்புக்கு
      நாடுவன் பொன்னினையே. (திருக். 234) 
      கொடிக்குறி பார்த்தல் 
      என்பது, செவிலி நாடத்துணிய,
      அவ்விருவரையு மிப்பொழுதே வரும் வண்ணம், நீ 
      கரைந்தால், நினக்குணங்கலை யஞ்சா
      திருந்துண்ணலாம், அதுவன்றித் தெய்வத்திற்கு 
      வைத்த நிணத்தையுடைய பலியையும் நினக்கே
      வரைந்து வைப்பேன், அவ்வாறு 
      கரைவாயாகவென,
      நற்றாய் கொடிக்குறி பார்த்தல். 
      (வ-று.) 
      பணங்களஞ் சாலும் பருவர
      வார்த்தவன் றில்லையன்ன 
      மணங்கொளஞ் சாயலும் மன்னனும்
      இன்னே வரக்கரைந்தால் 
      உணங்கலஞ் சாதுண்ண லாமொண்
      ணிணப்பலி ஓக்குவன்மாக் 
      குணங்களஞ் சாற்பொலி யுந்நல
      சேட்டைக் குலக்கொடியே. (திருக். 235) 
      (கு-ரை.) பணங்கன் அஞ்சு ஆலும் பரு
      அரவு - படங்கள் ஐந்து ஆடும்படியான 
      பருத்த
      ஐந்தலை நாகம். குணங்கள் ஐந்து - மறைந்த
      புணர்ச்சித்தாதல், கலங்காமை 
      பொழுது இறவாது
      இடம்புகுதல், நெடுகக் காண்டல், மடியின்மை
      என்பன. கொடி-காக்கை. 
      சோதிடங்கேட்டல் 
      என்பது, நொடி நிமித்தம் பெற்று,
      இக்காவல் மனையின் கண்ணே யாங்கள் 
      மணஞ்செய்ய, அவ்விருவரையு மின்னும் 
			
				
				 |