பொருளதிகாரம் | 335 | முத்துவீரியம் |
பெறுமாறுண்டாயி னாராய்ந்து
கூறுமினென, அறிவாளரைக் கிட்டிச், செவிலி
சோதிடங்
கேட்டல்.
(வ-று.)
முன்னுங் கடுவிடம் உண்டதென்
றில்லைமுன் னேனருளால்
இன்னுங் கடியிக் கடிமனைக் கேமற்
றியாமயர
மன்னுங் கடிமலர்க் கூந்தலைத்
தான்பெறு மாறுமுண்டேல்
உன்னுங்கள் தீதின்றி ஓதுங்கள்
நான்மறை உத்தமரே. (திருக். 236)
சுவடுகண்டறிதல்
என்பது, சோதிடம் பெற்றுச்
செல்கின்றவள், இம்முரம் பின்கட்கிடந்த
விவை
தீவினையே னெடுத்து வளர்த்த மாணிழை
சீறடி, உவை அக்கள்வனடியாமெனச் சுவடு
கண்டறியா
நிற்றல்.
(வ-று.)
தெள்வன் புனற்சென்னி யோனம்ப
லஞ்சிந்தி யாரினஞ்சேர்
முள்வன் பரன்முரம் பத்தினமுன்
செய்வினை யேனெடுத்த
வொள்வன் படைக்கண்ணி சீறடி
யிங்கிவை உங்குவையக்
கள்வன் பகட்டுர வோனடி யென்று
கருதுவனே. (திருக். 237)
சுவடுகண்டிரங்கல்
என்பது, சுவடு கண்டறிந்
தவ்விடத்தே நின்று, தவிசின் மேன்
மிதிப்பினும்
பதைத்துக் கொப்புட்கொள்ளும்
இக்கால் மலர், இன்றொரு விடலை பின்னே
போதற்குத்
தகுங்காலை யெவ்வா றொத்தனவென,
அடிச்சுவடு கண்டிரங்கல்.
(வ-று.)
பாலொத்த நீற்றம் பலவன்
கழல்பணி யார்பிணிவாய்க்
கோலத் தவிசின் மிதிக்கிற்
பதைத்தடி கொப்புள்கொள்ளும்
வேலொத்த வெம்பரற் கானத்தின்
இன்றொர் விடலைபின்போங்
காலொத் தனவினை யேன்பெற்ற
மாணிழை கான்மலரே. (திருக். 238)
வேட்ட மாதரைக் கேட்டல்
என்பது, சுவடு கண்டிரங்கி அது
வழியாகச் செல்கின்றவள், இவ்வாறறியாப்
பருவத்தளாய்த், தனக்கியைபில்லாத சுரத்
|