பொருளதிகாரம் | 336 | முத்துவீரியம் |
தின்கண் அயலானொருவனுடன்
போந்தாள், அவளை நீ கண்டாயோவென,
வேட்டமாதரைக்
கேளா நிற்றல்.
(வ-று.)
பேதைப் பருவம்பின் சென்றது
முன்றில் எனைப்பிரிந்தால்
ஊதைக் கலமரும் வல்லியொப்
பாண்முத்தன் றில்லையன்னாள்
ஏதிற் சுரத்தய லானொடின் றேகினள்
கண்டனையே
போதிற் பொலியுந்
தொழிற்புலிப் பற்குரற் பொற்றொடியே. (திருக். 239)
புறவொடு புலத்தல்
என்பது, வேட்டமாதரைக் கேட்டு
அது வழியாகச் செல்கின்றவள், ஏதிலனுமாய்த்
தமியனுமாய வன்சொற்றுணையாக வெய்ய சுரத்தே
மாதர் சென்றால், தில்லைப்புறவே,
இது
நினக்குத் தகுதியன்றெனக் கூறிற்றிலை, நீ
வாழ்வாயாகவென்று புறவொடு புலத்தல்.
(வ-று.)
புயலன் றலர்சடை யேற்றவன்
தில்லைப் பொருப்பரசி
பயலன் றனைப்பணி யாதவர்
போன்மிகு பாவஞ்செய்தேற்
கயலன் றமியனஞ் சொற்றுணை வெஞ்சுர
மாதர்சென்றால்
இயலன் றெனக்கிற் றிலைமற்று வாழி
எழிற்புறவே. (திருக். 240)
(கு-ரை.) புயலன் - துணையாக
வுள்ளவன்.
குரவொடு வருந்தல்
என்பது, புறவொடு புலந்து
போகின்றவள், என்னுடைய பாவை நினக்கு
முன்னே
யிக்கொதிக்குங் கடத்தைக் கடப்பக் கண்டு
நின்றும், இன்னவாறு போனாளென்
றெனக்கு
வாய்திறக்கின்றிலை, இது நினக்கு
நன்றோவெனக் குரவொடு வாடிக்கூறல்.
(வ-று.)
பாயும் விடையோன் புலியூ ரனையவென்
பாவைமுன்னே
காயுங் கடத்திடை யாடிக் கடப்பவுங்
கண்டுநின்று
வாயுந் திறவாய் குழையெழில்
வீசவண் டோலுறுத்த
நீயுநின் பாவையும் நின்று நிலாவிடு
நீள்குரவே. (திருக். 241)
|