பொருளதிகாரம்337முத்துவீரியம்

விரதியரை வினாவல்

என்பது, குரவொடு வருந்திச் செல்லா நின்றவள், பத்தியாபோல வொருபித்தி
தன்பின்னே வர ஒரு பெருந்தகை முன்னே செல்லக் கண்டீரோவென, விரதியரை வினாவா
நிற்றல்.

(வ-று.)

சுத்திய பொக்கணத் தென்பணி கட்டங்கஞ் சூழ்சடைவெண்
பொத்திய கோலத்தி னீர்புலி யூரம் பலவர்க்குற்ற
பத்தியர் போலப் பணைத்திறு மாந்த பயோதரத்தோர்
பித்திதற் பின்வர முன்வரு மோவொர் பெருந்தகையே. (திருக். 242)

(கு-ரை.) சுத்திய பொக்கணம் - பிறர்க்குத் திருநீறு கொடுத்தற்கு இப்படி வடிவாகத்
தலையோட்டான் அமைக்கப் படுவதொன்று. கடங்கம் - மழு. அது கட்டங்கம் என
நின்றது.

வேதியரை வினாவல்

என்பது, விரதியரை வினாவி அதுவழியாகப் போகின்றவள், மான்போலக் கண்ணு
மயில்போலுஞ் சாயலுமுடைய மான் ஓரேந்தலோடு நும்மெதிரே வரக் கண்டீரோவென
வேதியரை வினாவல்.

(வ-று.)

வெதிரேய் கரத்துமென் றோலேய் சுவல்வெள்ளை நூலிற்கொண்மூ
அதிரேய் மறையினிவ் வாறுசெல் வீர்தில்லை யம்பலத்துக்
கதிரேய் சடையோன் கரமா னெனவொரு மான்மயில்போல்
எதிரே வருமே சுரமே வெறுப்பவொர் ஏந்தலொடே. (திருக். 243)

(கு-ரை.) வெதிர் - மூங்கில். சுவல் - கழுத்து. கொண்மூ அதிர் ஏய் - மேகத்தின்
ஒலி போன்று.

புணர்ந்துடன் வருவோரைப் பொருந்தி வினாவல்

என்பது, வேதியரை வினாவி அதுவழியாகப் போகின்றவள், நும்மைக் கண்டு,
என்னாற் றேடப்படுகின்றார் மீண்டார்களென்று கருதி, மகிழ்ந்தேன், அதுகிடக்க, இவ்வாறு
நும்மோடொத்த வொழுக்கத்தினராய் முன்னே யிருவரைப் போகக் கண்டீரோ வெனப்
புணர்ந்துடன் வருவோரைப் பொருந்தி வினாவல்.