பொருளதிகாரம் | 340 | முத்துவீரியம் |
(வ-று.)
ஆண்டில் எடுத்தவ ராமிவர் தாமவர்
அல்குவர்போய்த்
தீண்டில் எடுத்தவர் தீவினை
தீர்ப்பவன் தில்லையின்வாய்த்
தூண்டில் எடுத்த வராறெங்கொ
டெற்றப் பழம்விழுந்து
பாண்டில் எடுத்தபஃ றாமரை கீழும்
பழனங்களே. (திருக். 249) (22)
உடன்போக்கு முற்றும்.
23. வரைவு முடுக்கம்
என்பது, இவ்வா
றுடன்போக்கு நிகழாதாயின் வரைந்து
கோடனிகழும், அது
நிகழுமிடத்துத் தோழி யான்
வரைவு முடுக்கப்பட்டும் வரை பொருட் பிரிந்து
வந்தும்
நிகழும்.
851. அவற்றுள்,
வருத்தங் கூறலு மவன்மறுத்
துரைத்தலும்
உள்ளது கூறலு மேதங் கூறலும்
பகல்வர லென்றலுந் தொழுதிரந்
துரைத்தலுஞ்
சிறைப்புறங் கூறலு மந்திமேல்
வைத்தலுங்
கண்டுயி லாமை கண்டா ருரைத்தலும்
பகலுடம் பட்டாள்போன் றிரவர
லென்றலும்
இரவுடம் பட்டாள்போன்று பகல்வர
லென்றலும்
இரவும் பகலும் வரவொழி கென்றலுங்
காலங் கூறலுங் கூறுவிக குற்றலுஞ்
செலவு கூறலும் பொலிவழி வுரைத்தலு
மீரெண் கிளவியு மியம்புங் காலை
வாரணி முலையாம் வரைவு முடுக்கம்.
என்பது, வருத்த மிகுதி கூறி வரைவு
கடாதல், பெரும்பான்மை கூறி மறுத்தல்,
உள்ளது
கூறி வரைவு கடாதல், ஏதங்கூறியிரவர விலக்கல்,
பழிவரவுரைத்துப் பகல்வரவு
விலக்கல்,
தொழுதிரந்து கூறல், தாயறிவு கூறல், மந்திமேல்
வைத்து வரைவு கடாதல்,
காவன்மேல் வைத்துக்
கண்டுயிலாமை கூறல், பகலுடம் பட்டாள்போன்
றிரவரவு
விலக்கல், இரவுடம்பட்டாள் போன்று
பகல்வரவு விலக்கல், இரவும் பகலும் வரவு
விலக்கல், காலங் கூறி வரைவு கடாதல்,
கூறுவிக்குற்றல், செலவு நினைந்துரைத்தல்
|