| எழுத்ததிகாரம் | 35 | முத்துவீரியம் |  
  
(இ-ள்.) மொழி
பெயரெனவும், வினையெனவும் இருவகையாம். (5) 
பெயர் 
120. பொருளிடங் காலஞ் சினைகுணந்
தொழிலொடு 
     வருவது பெயரென வழுத்தப் படுமே. 
(இ-ள்.) பொருள், இடம்,
காலம், சினை, குணம், தொழில் ஆகிய அறுவகையான் 
வருவது பெயராகுமென்க. 
(வ-று.) பொன்னன்,
பொருளால் வருபெயர், அகத்தன், இடத்தால்
வருபெயர். 
வேனிலான், காலத்தால் வருபெயர்.
மூக்கன், சினையால் வருபெயர், கரியன், குணத்தால் 
வருபெயர். ஓதுவான், தொழிலால் வருபெயர். 
(வி-ரை.) பொருள், இடம்
காலம், சினை, குணம், தொழிலின் வருபெயர் (நன் - பத 
- 5) என்பதற்கேற்ப அவ்வறுவகையான் வருவது பெயர் என்றார்.
(6) 
வினை 
121. வினைபல நிகழினும்
வினையெனப் படுமே. 
(இ-ள்.) பலவாக வினைகள்
நடப்பினும் வினையாகுமென்க. 
(வ-று.) நட, வா, மடி, சீ, விடு,
கூ, வே, வை, நொ, போ, வௌ, உரிஞ், உண், 
பொருந், திரும், தின், தேய், பார், செல், வவ், வாழ், கேள்,
அஃகு. 
(வி-ரை.) 
‘‘நடவா மடிசீ விடுகூ
வேவை 
நொப்போ வௌவுரிஞ்
உண்பொருந் திரும்தின் 
தேய்பார் செல்வவ்
வாழ்கேள் அஃகென்று 
எய்திய விருபான் மூன்றா மீற்றவும் 
செய்யென் னேவல்
வினைப்பகாப் பதமே’’ 
(நன் - பதவியல் - 10)
என்பர் நன்னூலார். (7) 
பெயர்திணைபால்
இடங்கட்கு உரியதாமாறு 
122. பெயரிரு திணையைம்
பான்மூ விடம்பெறும். 
(இ-ள்.) பெயர், உயர்திணை
அஃறிணையாகிய விருதிணையும், ஆண்பால் பெண்பால் 
பலர்பால் ஒன்றன்பால் பலவின் 
			
				
				 |