(திருக். 274)
  
      (கு-ரை.) தேனமர் சொல்லி,
      தில்லையின் மன்னை வணங்கலர் போல் செல்லல்
      செல்லல் எனக் கூட்டுக. செல்லல்
      செல்லல்-இன்னாமையை அடையாதொழி வாயாக.
      வழியொழுகி வற்புறுத்தல்
      என்பது, தலைமகள் வருத்தங்கண்ட
      தோழி, அவளை வழியொழுகி
      யாற்றுவிக்கவேண்டு
      மளவாகலி னாற்றாமைக்குக் காரணமாகியவற்றைக்
      கூறித்,
      தானுமவளொடு வருத்தமுற்று, அது கிடக்க
      இம்மலர்ப்பாவையை அன்னாட்கிவ்வேறுபாடு
      வந்தவா றென்னோவென்று, அயலவரை
      யுறாநிற்பராதலால் நீ யாற்ற வேண்டுமென்று
      அவள் வழியொழுகி வற்புறுத்தல்.
      (வ-று.)
      மதுமலர்ச் சோலையும் வாய்மையும்
      அன்பும் மருவிவெங்கான்
      கதுமெனப் போக்கும் நிதியின
      ருக்குமுன் னிக்கலுழ்ந்தால்
      நொதுமலர் நோக்குமொர் மூன்றுடை
      யோன்றில்லை நோக்கலர் போல்
      இதுமலர்ப் பாவைக்கென் னோவந்த
      வாறென்பர் ஏந்திழையே. (திருக். 275)
      வன்புறை யெதிரழிந்திரங்கல்
      என்பது, வழியொழுகி வற்புறுத்தின
      தோழியோடு, தலைமகன் வரைவு நீடுதலால்
      தமக்கோர் பற்றுக்கோடு இன்றி வருந்துந்
      திருவினையுடையார்க்கு அவன் வரைவு
      மிகவுமினிது,
      யானாற்றேனெனத், தலைமகள் வன்புறை யெதிரழிந்
      திரங்கல்.
      (வ-று.)
      வந்தாய் பவரையில் லாமயில்
      முட்டை இளையமந்தி
      பந்தா டிரும்பொழிற் பல்வரை
      நாடன்பண் போவினிதே
      கொந்தார் நறுங்கொன்றைக்
      கூத்தன்றென் றில்லை தொழார்குழுப்போல்
      சிந்தா குலமுற்றுப் பற்றின்றி
      நையுந் திருவினர்க்கே. (திருக். 276)
      வாய்மை கூறி வருத்தத் தணித்தல்
      என்பது, வரைவு நீடுதலான் வன்புறை
      யெதிரழிந்து வருந்திய தலைமகளுக்கு,
      அவர்
      சொன்ன வார்த்தை நினக்குப் பொய்யென்பதே
      கருத்தாயின் இவ்வுலகத்து
      மெய்யென்பது