பொருளதிகாரம் | 353 | முத்துவீரியம் |
சிறிதுமில்லையெனத், தோழி
தலைமகன் வாய்மை கூறி, அவள் வருத்தந் தணியா
நிற்றல்.
(வ-று.)
மொய்யென்ப தேயிழை கொண்டவன்
என்னைத்தன் மொய்கழற்காட்
செய்யென்ப தேசெய்த
வன்றில்லைச் சூழ்கடற் சேர்ப்பர்சொல்லும்
பொய்யென்ப தேகருத்
தாயிற்புரிகுழற் பொற்றொடியாய்
மெய்யென்ப தேதுமற் றில்லைகொ
லாமிவ் வியலிடத்தே. (திருக். 277)
தேறாது புலம்பல்
என்பது, தலைமகன் வாய்மை கூறி
வருத்தந் தணியாநின்ற தோழிக்கு, யான் அவர்
கூறிய மொழியின்படியே மெய்ம்மையைக்
கண்டுவைத்தும் என்னெஞ்சமுநிறையும் என்
வயமாய்நிற்கின்றன வில்லை, அதுவேயுமன்றி
என்னுயிரும் பொறுத்தற் கரிதாகா நின்றது,
இவை
இவ்வாறாதற்குக் காரணம் யாதென்றறிகின்றிலே
னெனத், தான் றேறாமை கூறிப்
புலம்பா நிற்றல்.
(வ-று.)
மன்செய்த முன்னாள் மொழிவழி
யேயன்ன வாய்மைகண்டும்
என்செய்த நெஞ்சும் நிறையுமில்
லாவென தின்னுயிரும்
பொன்செய்த மேனியன் தில்லையு
றாரிற் பொறையரிதாம்
முன்செய்த தீங்குகொல் காலத்து
நீர்மைகொல் மொய்குழலே. (திருக். 278)
காலமறைத்துரைத்தல்
என்பது, தேறாமை கூறிப்
புலம்புகின்ற தலைமகள் காந்தள் கருவுறக் கண்டு,
இஃதவர் வரவு குறித்த காலமென்று கலங்க,
நம்முடைய ஐயன்மார் தினைக்கதிர்
காரணமாகக்
கடவுளைப் பராவ, அக்கடவுளாணையாற்
காலமன்றியுங் கார்நீரைச் சொரிய,
அதனை
யறியாது, காலமென்று இக்காந்தள் மலர்ந்தன,
நீயதனைக் காலமென்று
கலங்கவேண்டாவெனத்,
தோழி அவளை யாற்றுவித்தற்குக் காலமறைத்துக்
கூறா நிற்றல்.
(வ-று.)
கருந்தினை யோம்பக் கடவுட் பராவி
நமர்கலிப்பச்
சொரிந்தன கொண்மூச் சுரந்ததன்
பேரரு ளாற்றொழும்பிற்
|