பொருளதிகாரம் | 354 | முத்துவீரியம் |
பரிந்தெனை யாண்டசிற் றம்பலத்
தான்பரங் குன்றிற்றுன்றி
விரிந்தன காந்தள் வெருவரல்
காரென வெள்வளையே. (திருக். 279)
தூதுவர வுரைத்தல்
என்பது, காலமறைத்த தோழி, ஒரு
தூது வந்து தோன்றா நின்றது, அஃது இன்னார்
தூதென்று தெரியாதெனத், தானின் புறவோடு நின்று,
அவள் மனமகிழும்படி
தலைமகளுக்குத் தூது
வரவுரைத்தல்.
(வ-று.)
வென்றவர் முப்புரம் சிற்றம்
பலத்துணின் றாடும்வெள்ளிக்
குன்றவர் குன்றா அருடரக் கூடினர்
நம்மகன்று
சென்றவர் தூதுகொல் லோவிருந்
தேமையும் செல்லல்செப்பா
நின்றவர் தூதுகொல் லோவந்து
தோன்றும் நிரைவளையே. (திருக். 280)
தூதுகண்டழுங்கல்
என்பது, தூதுவர வுரைப்பக் கேட்ட
தலைமகள், மனமகிழ்வோடு நின்று, இஃது
அயலாரது
தூதாகையால் இவை வருவன செல்வனவாகா நின்றன,
காதலர் தூதின்று
வாராதிருக்கின்ற தென்செயக்
கருதி யென்றறிகின்றிலே னென்று, ஏதிலார் தூது
கண்டழுங்கல்.
(வ-று.)
வருவன செல்வன தூதுக ளேதில
வான்புலியூர்
ஒருவன தன்பரின் இன்பக் கலவிகள்
உள்ளுருகத்
தருவன செய்தென தாவிகொண்
டேகியென் நெஞ்சிற்றம்மை
இருவின காதலர் ஏதுசெய் வானின்
றிருக்கின்றதே. (திருக். 281)
மெலிவுகண்டு செவிலிகூறல்
என்பது, ஏதிலார் தூதுகண்
டழுங்காநின்ற தலைமகளைச் செவிலி
யெதிர்ப்பட்டு,
அடியிற்கொண்டு முடிகாறு
நோக்கி, இவள் பண்டைத் தன்மையளல்லள்,
இவ்வாறு
மெலிதற்குச் சேயினதாட்சியிற்
பட்டனள் போலு மென்றறிகின்றிலேனென்று, அவள்
மெலிவுகண்டு கூறாநிற்றல்.
|