பொருளதிகாரம்355முத்துவீரியம்

(வ-று.)

வேயின மென்றோள் மெலிந்தொளி வாடி விழிபிறிதாய்ப்
பாயின மேகலை பண்டையள் அல்லள் பவளச்செவ்வி
ஆயின ஈசன் அமரர்க் கமரன்சிற் றம்பலத்தான்
சேயின தாட்சியிற் பட்டன ளாமித் திருந்திழையே. (திருக். 282)

கட்டுவைப்பித்தல்

என்பது, மெலிவுகண்ட செவிலி, அவள் பருவங்கூறி, இவ்வணங்குற்ற நோயைத்
தெரியவறிந்துரைமி னெனக் கட்டுவித்திக் குரைத்துக் கட்டுவைப்பித்தல்.

(வ-று.)

சுணங்குற்ற கொங்கைகள் சூதுற் றிலசொல் தெளிவுற்றில
குணங்குற்றங் கொள்ளும் பருவ முறாள்குறு காவசுரர்
நிணங்குற்ற வேற்சிவன் சிற்றம் பலநெஞ் சுறாதவர்போல்
அணங்குற்ற நோயறி வுற்றுரை யாடுமின் அன்னையரே. (திருக். 283)

கலக்கமுற்று நிற்றல்

என்பது, செவிலி கட்டுவைப்பியா நிற்ப, இவளுள்ளம் ஓடியவாறு முழுதையும்
புலப்படுத்தி, நம்மை வருத்தி, அயலாரன்று மொழியாத பழியையும் வெளிப்படக்கூறி,
எம்மிடத்துண்டாகிய நாணினையுந்தள்ளி, எங்குடியினையுங் குற்றப்படுத்தியல்லவே
இக்கட்டுவித்தி நிற்கப் புகுகின்ற தெனத், தோழி கலக்கமுற்று நில்லா நிற்றல்.

(வ-று.)

மாட்டியன் றேயெம் வயிற்பெரு நாணினி மாக்குடிமா
சூட்டியன் றேநிற்ப தோடிய வாறிவள் உள்ளமெல்லாம்
காட்டியன் றேநின்ற தில்லைத்தொல் லோனைக்கல் லாதவர்போல்
வாட்டியன் றேர்குழ லார்மொழி யாதன வாய்திறந்தே. (திருக். 284)

கட்டுவித்தி கூறல்

என்பது, தோழி கலக்கமுற்று நில்லா நிற்ப, இருவரையும் நன்மையாகக் கூட்டுவித்த
தெய்வம் புறத்தார்க் கிவ்வொழுக்கம்