பொருளதிகாரம்356முத்துவீரியம்

புலப்படாமல் தானிட்ட நெல்லின்கண் முருகணங்கு கரட்ட இதனை யெல்லீருங்
காண்மின், இவளுக்கு முருகணங் கொழியப் பிறிதொன்றுமில்லை யெனக், கட்டுவித்தி
நெற்குறி காட்டிக் கூறாநிற்றல்.

(வ-று.)

குயிலிதன் றேயென்ன லாஞ்சொல்லி கூறன்சிற் றம்பலத்தான்
இயலிதன் றேயென்ன லாகா இறைவிறற் சேய்கடவும்
மயிலிதன் றேகொடி வாரணங் காண்கவன் சூர்தடிந்த
அயிலிதன் றேயிதன் றேநெல்லிற் றோன்றும் அவன்வடிவே. (திருக். 285)

வேலனை யழைத்தல்

என்பது, கட்டுவித்தி முருகணங் கென்று கூறக்கேட்டு, இப்பாலன் இக்குடியின்கட்
பிறந்து நம்மை யிவ்வாறு நிற்பித்த பண்பினுக்கு, வேலன் புகுந்து வெறியுமாடுக,
அதன்மேல் மறிய மறுக்க வெனத் தாயர் வேலனை யழைத்தல்.

(வ-று.)

வேலன் புகுந்து வெறியா டுகவெண் மறியறுக்க
காலன் புகுந்தவி யக்கழல் வைத்தெழிற் றில்லைநின்ற
மேலன் புகுந்தென்கண் நின்றான் இருந்தவெண் காடனைய
பாலன் புகுந்திப் பரிசினின் நிற்பித்த பண்பினுக்கே. (திருக். 286)

இன்னலெய்தல்

என்பது, வெறியாடுதற்குத் தாயர் வேலனை யழைப்பக் கேட்ட தலைமகள்,
இருவாற்றானும் நமக்குயிர்வாழும் நெறியில்லையெனத், தன்னுள்ளே கூறி இன்னலெய்தா
நிற்றல்.

(வ-று.)

அயர்ந்தும் வெறிமறி யாவி செகுத்தும் விளர்ப்பயலார்
பெயர்ந்தும் ஒழியா விடினென்னை பேசுவ பேர்ந்திருவர்
உயர்ந்தும் பணிந்தும் உணரான தம்பலம் உன்னலரின்
துயர்ந்தும் பிறிதின் ஒழியினென் னாதும் துறைவனுக்கே. (திருக். 287)