| பொருளதிகாரம் | 359 | முத்துவீரியம் |  
  
(வ-று.) 
      விதியுடை யாருண்க வேரி விலக்கலம்
      அம்பலத்துப் 
      பதியுடை யான்பரங் குன்றினிற்
      பாய்புனல் யாமொழுகக் 
      கதியுடை யான்கதிர்த் தோணிற்க
      வேறு கருதுநின்னின் 
      மதியுடை யார்தெய்வ மேயில்லை
      கொல்லினி வையகத்தே. (திருக். 292) 
      (கு-ரை.) வேரி - கள். 
      செவிலிக்குத் தோழி
      யறத்தொடுநிற்றல் 
      என்பது, வெறிவிலக்கிநிற்ப, நீ
      வெறிவிலக்குதற்குக் காரண மென்னோ வென்று 
      கேட்ட செவிலிக்கு, நீ போய்ப் புனங் காக்கச்
      சொல்ல, யாங்கள் போய்த் தினைக்கிளி 
      கடியா
      நின்றோம், அவ்விடத் தொருயானை வந்து
      நின்மகளை ஏதஞ்செய்யப் புக்கது, 
      அதனைக் கண்டு
      அருளுடையா னொருவ னோடிவந் தணைத்துப்
      பிறிதொன்றுஞ் 
      சிந்தியாமல் யானையைக்
      கடிந்து, அவளுயிர் கொடுத்துப் போயினான்,
      அறியாப்  
 பருவத்து நிகழ்ந்ததனை இன்றறியும்
      பருவமாதலான், உற்றார்க்குரியர் பொற்றொடி
      மகளிரென்பதனை யுட்கொண்டு, இவ்வாறு உள்
      மெலியா நின்றாள், இனியடுப்பது 
      செய்வாயாகனெத் தோழி அறத்தொடு நிற்றல். 
      (வ-று.) 
      மனக்களி யாயின்றி யான்மகிழ்
      தூங்கத்தன் வார்கழல்கள் 
      எனக்களி யாநிற்கும் அம்பலத்
      தோனிருந் தண்கயிலைச் 
      சினக்களி யானை கடிந்தார்
      ஒருவர்செவ் வாய்ப்பசிய 
      புனக்கிளி யாங்கடி யும்வரைச்
      சாரற் பொருப்பிடத்தே. (திருக். 293) 
      நற்றாய்க்குச் செவிலி
      யறத்தொடு நிற்றல் 
      என்பது, தோழி அறத்தொடு
      நிற்பக்கேட்ட செவிலி, இளையளாகிய
      இல்வாழ்க்கைச் 
      செல்வத்தையுடைய இவளை
      என்சொல்லிப் புகழுவோம், முன்னெழு
      மிரண்டெயிறு 
      முளையாத இளமைப் பருவத்தே அறிவு
      முதிர்ந்தாளெனத், தலைமகள் கற்புமிகுதி
      தோன்ற 
      நற்றாய்க் கறத்தொடு நிற்றல். 
      (வ-று.) 
      இளையா ளிவளையென் சொல்லிப்
      பரவுதும் ஈரெயிறு 
      முளையா அளவின் முதுக்குறைந் தாள்முடி
      சாய்த்திமையோர் 
			
				
				 |