| பொருளதிகாரம் | 361 | முத்துவீரியம் |  
  
(வ-று.) 
      அடற்களி யாவர்க்கும் அன்பர்க்
      களிப்பவன் துன்பவின்பம் 
      படக்களி யாவண் டறைபொழிற்
      றில்லைப் பரமன்வெற்பின் 
      கடக்களி யானை கடிந்தவர்க்
      கோவன்றி நின்றவர்க்கோ 
      விடக்களி யாநம் விழுநகர்
      ஆர்க்கும் வியன் முரசே. (திருக். 297) 
      நிதிவரவு கூறாநிற்றல் 
      என்பது, முரசொலிகேட் டையுற்றுக்
      கலங்கிய தலைமகளுக்கு, நமர் 
      வேண்டினபடியே
      அருங்கலங் கொடுத்து நின்னை வரைந்து
      கொள்வாராக, யானை கடிந்தார், 
      நமது கடைமுன்
      கொணர்ந்திறுத்தார் குறைவில்லாத நிதி, இதனை
      நீ காண்பாயாகவெனத், 
      தோழி மகிழுமனத்தோடு
      நின்று நிதிவரவு கூறல். 
      (வ-று.) 
      என்கடைக் கண்ணினும் யான்பிற
      ஏத்தா வகையிரங்கித் 
      தன்கடைக் கண்வைத்த தண்டில்லைச்
      சங்கரன் தாழ்கயிலைக் 
      கொன்கடைக் கண்டரும் யானை
      கடிந்தார் கொணர்ந்திறுத்தார் 
      முன்கடைக் கண்ணிது காண்வந்து
      தோன்றும் முழுநிதியே. (திருக். 298) 
      (கு-ரை.) கொன்கடைக்கண் தரும் -
      தமக்கொரு பயன் கருதாது நமக்கு இறுதியைப் 
      பயக்கும். யானை கடிந்தார் - யானையை முன்பு
      கடிந்தவர்; களிறுதரு புணர்ச்சி குறித்தது. 
      (24) 
      வரைபொருட்பிரிதன் முற்றும். 
        
      3. கற்பொழுக்க வியல் 
      கற்பு 
      853. பொற்பமை சிறப்பிற்
      கற்பெனப் படுவ 
           மகிழ்வு மூடலு மூட லுணர்த்தலும் 
           பிரிவும் பிறவு மருவிய தாகும். 
      என்பது, அழகிய சிறப்பையுடைய
      கற்பென்று கூறப்படுவது மகிழ்ச்சியு மூடலு 
      மூடலுணர்த்தலும் பிரிவு மிவைபோல்வன
      பிறவுமாம். 
			
				
				 |