பொருளதிகாரம்234முத்துவீரியம்

குற்றுழிப் பிரிதல், பொருள்வயிற்பிரிதல், பரத்தையிற்பிரிதல் ஆகிய விருபத்தைந்தும்
அகத்திணை நிகழ்ச்சியாம்.

முற்கூறியவற்றுள் இயற்கைப் புணர்ச்சியென்பது, தலைமகனும் தலைமகளும்
பொழிலிடத்து எதிர்ப்பட்டுத் தெய்வம் இடைநிற்பப் பான்மைவழியோடி ஓராவிற்கிருகொம்பு
தோன்றினாற்போலத் தம்முள் ஒத்த அன்பினராய் அவ்விருவரொத்தார் தம்முட்டாமே
கூடுங்கூட்டம். (6)

7. கைக்கிளையின் வகை

835. காட்சி யையந் தெளித னயப்பே
     உட்கோ டெய்வந் துணிதல் கைக்கிளை.

என்பது, காட்சி ஐயம் தெளிதல் நயப்பு உட்கோள் தெய்வத்தை மகிழ்தல் புணர்ச்சி
துணிதல் ஆகிய ஏழுங் கைக்கிளை.

காட்சி

என்பது, தலைமகளைத் தலைமகன் கண்ணுற்றது.

(வ-று.)

திருவளர் தாமரை சீர்வளர் காவிக ளீசர்தில்லைக்
குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள்கொண் டோங்குதெய்வ
மருவளர் மாலையொர் வல்லியி னொல்கி யனநடைவாய்ந்
துருவளர் காமன்றன் வென்றிக் கொடிபோன் றொளிர்கின்றதே.

(திருக்கோவையார். 1)

(கு-ரை.) திரு - கண்டாரால் விரும்பப்படும் தம்மை நோக்கம். வல்லியின் - ஒரு
வல்லிக் கொடியைப் போல. உருவளர் காமன் - வடிவழகுமிக்க மன்மதன்.

ஐயம்

என்பது, கண்ணுற்றபின்றை இங்ஙனந்தோன்றிய இம்மாது யார் கொல்லென ஐயுற்றது.

(வ-று.)

போதோ விசும்போ புனலோ பணிக ளதுபதியோ
யாதோ அறிகுவ தேது மரிதி யமன்விடுத்த