பொருளதிகாரம்381முத்துவீரியம்

வருதல் யாண்டையது, இவளாற்றுதல் யாண்டையது என, அவளிரவுறு துயரத்திற்குத்
தானிரக்கமுற்றுக் கூறல்.

(வ-று.)

ஆழியொன் றீரடி யும்மிலன் பாகன்முக் கட்டில்லையோன்
ஊழியொன் றாதன நான்குமைம் பூதமும் ஆறொடுங்கும்
ஏழியன் றாழ்கட லும்மெண் டிசையும் திரிந்திளைத்து
வாழியன் றோவருக் கன்பெருந் தேர்வந்து வைகுவதே. (திருக். 339)

இகழ்ச்சி நினைந்தழிதல்

என்பது, தோழி இரக்கமுற்றுக் கூறாநிற்ப, முற்காலத்து அவருலகின்மேல்
வைத்துணர்த்திய வழி நீட்டித்துப் பிரிவாராயினும் இப்பொழுதைக்கு இவர் பிரியாரென
யான் அவர் பிரிவிகழ்ந்திருந்தேன், முன்னின்று பிரிவுணர்த்தினால் இவளுயிர்
தரியாளென்று அவருணர்த்துதலை இகழ்ந்துபோனார், அத்தன்மைய வாகிய
இரண்டிகழ்ச்சியு மென்னை யித்தன்மைத்தாக அழிவியா நின்றனவெனத், தலைமகளிகழ்ச்சி
நினைந்தழியா நிற்றல்.

(வ-று.)

பிரியா ரெனவிகழ்ந் தேன்முன்னம் யான்பின்னை எற்பிரியின்
தரியா ளெனவிகழ்ந் தார்மன்னர் தாந்தக்கன் வேள்விமிக்க
எரியா ரெழிலழிக் கும்மெழி லம்பலத் தோனெவர்க்கும்
அரியான் அருளிலர் போலன்ன என்னை அழிவித்தவே. (திருக். 340)

உருவு வெளிப்பட்டு நிற்றல்

என்பது, தலைமகளிகழ்ச்சி நினைந்தழியா நிற்பத், தானுணர்த்தாது
பிரிந்தமையுட்கொண்டு பொருள் வலித்த நெஞ்சொடு செல்லா நின்ற தலைமகன், காணுந்
திசைதோறுங் கயலையும் வில்லையுஞ் சிவந்த கனியையு முலையையுங் கொண்டொரு
பூங்கொடி தோன்றா நின்றதெனத், தலைமகளுருவை நினைந்து, மேற்போக மாட்டாது
மீளலுற்றுச் சுரத்திடை நில்லா நிற்றல்.

(வ-று.)

சேணுந் திகழ்மதிற் சிற்றம் பலவன்றெண் ணீர்க்கடனஞ்
சூணுந் திருத்து மொருவன் திருத்தும் உலகினெல்லாம்