| பொருளதிகாரம் | 383 | முத்துவீரியம் |  
  
(வ-று.) 
      தீமே வியநிருத் தன்றிருச்
      சிற்றம் பலமனைய 
      பூமே வியபொன்னை விட்டுப்பொன் தேடியிப்
      பொங்குவெங்கான் 
      நாமே நடக்க ஒழிந்தனம் யாநெஞ்சம் வஞ்சியன்ன 
      வாமே கலையைவிட் டோபொருள் தேர்ந்தெம்மை
      வாழ்விப்பதே.  
                                                            
      (திருக். 344) 
      நாளெண்ணி வருந்தல் 
      என்பது, தலைமகன் வரவு
      நீட்ட நினைந்து வருந்தா நின்ற தலைமகளது 
      வருத்தங்கண்ட தோழி, இவள் நோயுறப் போனவர்
      போன நாளை யெண்ணுந் தன்மையாற் 
      பலகாலிடுதலின் நிலனுங் குழிந்து விரலுந் தேய்ந்ததென
      அவன் சென்ற நாளெண்ணி 
      வருந்தா நிற்றல். 
      (வ-று.) 
      தெண்ணீர் அணிசிவன்
      சிற்றம் பலஞ்சிந்தி யாதவரின் 
      பண்ணீர் மொழியிவ ளைப்பையு
      ளெய்தப் பனித்தடங்க 
      ணுண்ணீர் உகவொளி வாடிட நீடுசென் றார்சென்றநாள் 
      எண்ணீர் மையினில னுங்குழி
      யும்விரல் இட்டறவே. (திருக். 345) 
      ஏறுவரவு கண்டிரங்கி யுரைத்தல் 
      என்பது, பொருண்முற்றித்
      திரும்பிய தலைமகன், மாலையின் நாகொடுவாரா நின்ற 
      ஏறு வரவுகண்டு, இச்சிறந்த செக்கர்மாலை
      அவள் பொறுக்குமளவன்றென விரங்கிக் கூறா 
      நிற்றல். 
      (வ-று.) 
      சுற்றம் பலமின்மை காட்டித்தன்
      தொல்கழல் தந்ததொல்லோன் 
      சிற்றம் பலமனை யாள்பர மன்றுதிண் கோட்டின்வண்ணப் 
      புற்றங் குதர்ந்துநன் னாகொடும்
      பொன்னார் மணிபுலம்பக் 
      கொற்றம் மருவுகொல் லேறுசெல்
      லாநின்ற கூர்ஞ்செக்கரே. (திருக். 346) 
      (கு-ரை.) சுற்றம்பலம் இன்மை
      காட்டி - சுற்றத்தால் பயனின்மை காட்டி. 
			
				
				 |