| பொருளதிகாரம் | 385 | முத்துவீரியம் |  
  
காவியை வெல்லு மிடற்றோன்
      அருளிற் கதுமெனப்போய் 
      மேவிய மாநிதி யோடன்பர்
      தேர்வந்து மேவினதே. (திருக். 346) 
      இளையரெதிர் கோடல் 
      என்பது, தோழி தலைமகட்குத்
      தேர் வரவு கூறாநிற்ப, இந்நிலைமைக்கண், இனி 
      இவளாவி செல்வதற்கு முன்னே நிதியோடு அன்பர்
      தேர் வந்தது, இனி ஊழின் வலியது 
      வேறொன்றும் இல்லையெனப் பொருண் முடித்து வாராநின்ற
      தலைமகனைச் சென்றிளைய 
      ரெதிர்கோடல். 
      (வ-று.) 
      யாழின் மொழிமங்கை பங்கன்சிற்
      றம்பலத் தானமைத்த 
      ஊழின் வலியதொன் றென்னை ஒளிமே கலையுகளும் 
      வீழும் வரிவளை மெல்லிய லாவிசெல் லாதமுன்னே 
      சூழுந் தொகுநிதி யோடன்பர்
      தேர்வந்து தோன்றியதே. (திருக். 350) 
      உண்மகிழ்ந் துரைத்தல் 
      என்பது, பொருண்முடித்து இளைஞர்
      எதிர்கொள்ள வந்து புகுந்த தலைமகன், 
      தலைமகளுடன் பள்ளியிடத்தனாயிருந்து,
      இம்மானைப் பிரிந்து பொருள்தேட யான் 
      வெய்ய சுரஞ்சென்ற துன்பம் எல்லாம் இவள்
      கொங்கைக ளென்னுறுப்புக்க ளிடை மூழ்க, 
      இப்பூவணைமேல் அணையா முன்னம் துவள்வுற்றதெனத்
      தன்னுள்ளே மகிழ்ந்து கூறல். 
      (வ-று.) 
      மயின்மன்னு சாயலிம்
      மானைப் பிரிந்து பொருள்வளர்ப்பான் 
      வெயின்மன்னு வெஞ்சுரஞ் சென்றதெல் லாம்விடை
      யோன்புலியூர்க் 
      குயின்மன்னு சொல்லிமென் கொங்கையென் அங்கத்
      திடைக்குளிப்பத் 
      துயின்மன்னு பூவணை மேலணை யாமுன் துவளுற்றதே. (திருக். 351) (8) 
      பொருள்வயிற்பிரிவு முற்றும். 
			
				
				 |