எழுத்ததிகாரம் | 39 | முத்துவீரியம் |
(இ-ள்.) முப்பத்துமூன்றா
மெய்யாகிய ஹ முதலில் அகரமும், நடுவிற் ககரமுமாகத்
திரியும்.
(வ-று.) அரன், மோகம். (19)
க்ஷ இரு ககரமாகத் திரிதல்
134. ஐந்தலை யிட்ட
வாறைந் திருகவ்வே.
(இ-ள்.) முப்பத்தைந்தா
மெய்யாகிய க்ஷ இரண்டு ககரமாகத் திரியும்.
(வ-று.) அக்கரம். (20)
ஆகார இறுதி ஐகாரமாதல்
135. ஆகார விறுபெய ரைகார
மாகும்.
(இ-ள்.) ஆகார விறுதிப்
பெயர்கள் ஐகாரமாகத்திரியும்.
(வ-று.) மாலை. (21)
ஈகார இறுதி இகரமாதல்
136. ஈகார விறுபெய ரிகரமா
மென்ப.
(இ-ள்.) ஈகார விறுதிப்
பெயர்கள் இகரமாகத் திரியும்.
(வ-று.) புரி. (22)
ரகரம் மொழிக்கு
முதலாகுமாறு
137. ரவ்விற் கம்முத
லாமுக் குறிலு
மொழிமுத லாகி முன்வரப்
பெறுமே.
(இ-ள்.) ரகரமெய்க்கு அ, இ,
உ ஆகிய மூன்று குற்றெழுத்துக்களிலொன்று மொழிக்கு
முதலாகி முன்னர்ப்போதரும்.
(வ-று.) அரங்கம், இராமன்,
உரோமம். (23)
லகரம் மொழிக்கு
முதலாகுமாறு
138. இ, உ, லகரமுன்
னெதிர்தரு மென்ப.
|