பொருளதிகாரம் | 390 | முத்துவீரியம் |
வாரம்பகர்ந்து
வாயின்மறுத்துரைத்தல்
என்பது, விளக்கொடு வெறுத்து
வருந்திய தலைமகள், தலைமகன் பரத்தையிற்
பிரிந்துவந்து வாயிற்க ணிற்ப, வண்டோ ரனையராடவர்,
பூவோரனையர் மகளிராதலான்,
யாமுமவன் தலையளிபெற்ற பொழுதேற்றுக் கொள்வதன்றோ
நமக்குக்காரியம், நாம்
அவனொடு புலக்கற்பாலே மல்லேமென்று வாயினேர்
வித்தார்க்கு, ஊரனது மாலையுந்
தோளும் அவ்விடத்து வளைத்து வைத்து, வேண்டினார்
கொள்ள அமையும், யான்
மன்னனைப்
பரத்தையர்க்கு உறாவரையாகக் கொடுத்தேனென,
மறுத்துரையா நிற்றல்.
(வ-று.)
பூங்குவ ளைப்பொலி மாலையும்
ஊரன்பொற் றோளிணையும்
ஆங்கு வளைத்துவைத் தாரேனுங்
கொள்கநள் ளாரரணம்
தீங்கு வளைத்தவில்
லோன்றில்லைச் சிற்றம் பலத்தயல்வாய்
ஓங்கு வளைக்கரத் தார்க்கடுத்
தோமன் உறாவரையே. (திருக். 357)
பள்ளியிடத் தூடல்
என்பது, வாயின் மறுத்த தலைமகள்,
ஆற்றாமையே வாயிலாகப் புக்குப்
பள்ளியிடத்தானாகிய தலைமகனோடு, நின்னை யிடைவிடாது
நுகர்தற்கு முற்காலத்துத்
தவஞ்செய்யாத தீவினையேனை நோவாது, இன்றிவ்வாறாகிய
நின்னை நோவதெனனோ,
அது கிடக்க, நின் காதலிமார், புறமே கற்று நினக்குப்
புதிதாகச் செய்த அப்புல்லுதலை
யாம் செய்ய மாட்டோம், அதனால் எம்மைத் தொடாதே,
எம் கலையை
விடுவாயாகவென, கலவிகருதிப் புலவா
நிற்றல்.
(வ-று.)
தவஞ்செய்தி லாதவெந் தீவினை
யேம்புன்மைத் தன்மைகெள்ளா
தெவஞ்செய்து நின்றினி யின்றுனை
நோவதென் அத்தன்முத்தன்
சிவன்செய்த சீரரு ளார்தில்லை
யூரநின் சேயிழையார்
நவஞ்செய்த புல்லங்கண் மாட்டேம்
தொடல்விடு நற்கலையே. (திருக். 358)
(கு-ரை.) எவம் செய்து - துன்பம்
செய்து. எவ்வம் எவம் என நின்றது. நலம்
செய்து புல்லங்கள் - புதிதாகச் செய்த புல்லல்கள் புல்
என்பது புல்லம் என விரிந்து
நின்றது.
|