பொருளதிகாரம்391முத்துவீரியம்

செவ்வணிவிடுக்க வில்லோர் கூறல்

என்பது, இக்கொங்கை கள் தாங்கித் தளராநின்ற மருங்குலை யுடைய இவள்
வருந்த, இவ்வாயத்தார் முன்னே அப்பரத்தையர் மனைக்கண், இப்பேதை இக்குறி
அறிவிக்கச் செல்லாநின்ற இஃது, நமக்கு மிகவும் இளிவரவுடைத்தெனச், செவ்வணி விடுக்க
விரையா நின்ற இல்லோர் தம்முட் கூறாநிற்றல்.

(வ-று.)

தணியுறப் பொங்குமிக் கொங்கைகள் தாங்கித் தளர்மருங்குல்
பிணியுறப் பேதைசென் றின்றெய்து மாலர வும்பிறையும்
அணியுறக் கொண்டவன் றில்லைத்தொல் லாயநல் லார்கண்முன்னே
பணியுறத் தோன்றும் நுடங்கிடை யார்கள் பயின்மனைக்கே. (திருக். 359)

அயலறிவுரைத்த ளழுக்கமெய்தல்

என்பது, இல்லோர் செவ்வணி விடுக்க நினையாநிற்ப, அயலார் முன்னே இவளால்
இக்குறியறிந்த விடத்து, ஒருத்தி நமக்குத்தர நாம் அவனை யெய்தும்படி யாயிற்று
நம்முடைய பெண் தன்மையென, அயலறிவுரைத்துத் தலைமகள் அழுக்கமுற்றுக் கூறல்.

(வ-று.)

இரவணை யும்மதி யேர்நுத லார்நுதிக் கோலஞ்செய்து
குரவணை யுங்குழ லிங்கிவ ளாலிக் குறியறிவித்
தரவணை யுஞ்சடை யோன்றில்லை யூரனை ஆங்கொருத்தி
தரவணை யும்பரி சாயின வாறுநந் தன்மைகளே. (திருக். 360)

செவ்வணிகண்ட வாயிலவர் கூறல்

என்பது, தலைமகளிடத்து நின்றுஞ் செவ்வணி செல்லக் கண்டு, நம்மூரற் குலகியலா
றுரைப்பான்வேண்டிச், செம்மலரும் செம்பட்டும் செஞ்சாந்தும், நமது திருவையுடைய
மனையின்கண் வந்து தோன்றின வெனப், பரத்தைவாயிலவர் தம்முண் மதித்தியம்பா
நிற்றல்.

(வ-று.)

சிவந்தபொன் மேனி மணிதிருச் சிற்றம் பலமுடையான்
சிவந்தவந் தாளணி யூரற் குலகிய லாறுரைப்பான்