பொருளதிகாரம்392முத்துவீரியம்

சிவந்தபைம் போதுமஞ் செம்மலர்ப் பட்டுங்கட் டார்முலைமேற்
சிவந்தவஞ் சாந்தமுந் தோன்றின வந்து திருமனைக்கே. (திருக்.361)

மனைபுகல்கண்ட வாயிலவர் கூறல்

என்பது, செவ்வணிகண்ட தலைமகன், பரத்தை யிடத்து நின்றும் வந்து தடையின்றி
மனைவயிற் புகுதா நிற்ப, பண்டிரவும் பகலும் வாயில் பொது நின்றுணங்கும்
இக்காவலையுடைய கடையை இத்துணைக் காலத்திற் கழித்து, வாயிலன்றிப் புகுதா
நின்றான், மனைக்கடன் பூண்டலால் இனிப் புலந் தடங்காதார் ஒருவருமில்லை யெனத்,
தலைமகன் வாயிலவர் தம்முட் கூறா நிற்றல்.

(வ-று.)

குராப்பயில் கூழை யிவளின்மிக் கம்பலத் தான்குழையாம்
அராப்பயில் நுண்ணிடை யாரடங் காரெவ ரேயினிப்பண்
டிராப்பகல் நின்றுணங் கீர்ங்கடை யித்துணைப் போழ்திற்சென்று
கராப்பயில் பூம்புன லூரன் புகுமிக் கடிமனைக்கே. (திருக். 362)

முகமலர்ச்சி கூறல்

என்பது, பரத்தையிற் பிரிந்த தலைமகன், செவ்வணிகண்டு வந்தானென்றியம்பு
மளவில், தலைமகள் கண்கள் சிவந்தன, அப்புலவி நோக்கத் தெதிர் காதலனோக்க,
அச்சிவப்பாறி, முகம் அலர்ந்தமையை அவ்விடத்துக் கண்டவர் தம்முட் கூறல்.

(வ-று.)

வந்தான் வயலணி யூரன் எனச்சின வாண்மலர்க்கண்
செந்தா மரைச்செவ்வி சென்றசிற் றம்பல வன்னருளான்
முந்தா யினவிய னோக்கெதிர் நோக்க முகமடுவிற்
பைந்தாட் குவளைகள் பூத்திருள் சூழ்ந்து பயின்றனவே. (திருக். 363)

காலநிகழ் வுரைத்தல்

என்பது, பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகன், ஆற்றாமையைத் தலைமகள்
நீக்காதிருப்ப, வண்டூதுமல்லிகைப் போதானும் அந்திப் பிறையானும் கங்குற் பொழுதானும்
ஆற்றானாய்ப் புகுதரா நின்றான், இனி நீ புலக்கற்பாலை யல்லையென, உழையர்
கூறாநிற்றல்.