பொருளதிகாரம்394முத்துவீரியம்

(வ-று.)

மலரைப் பொறாவடி மானும் தமியண்மன் னன்னொருவன்
பலரைப் பொறாதென் றிழிந்துநின் றாள்பள்ளி காமனெய்த
அலரைப் பொறாதன் றழல்விழித் தோனம் பலம்வணங்காக்
கலரைப் பொறாச்சிறி யாளென்னை கொல்லோ கருதியதே. (திருக். 367)

(கு-ரை.) கலரைப் பொறாச் சிறியவள் - தீய மக்களைப் பொறாத சிறியவள்.

வாயிலவர் வாழ்த்தல்

என்பது, செவ்வணி விடுக்கப் பூப்பியற் செவ்விகெடாமல் மெலிவறிந்து இவளது
பொலிவோடு வந்தமையால், இவன் மெய்யே தக்க வாய்மையனெனத், தலைமகனை
வாயிலவர் வாழ்த்தல்.

(வ-று.)

வில்லைப் பொலிநுதல் வேற்பொலி கண்ணி மெலிவறிந்து
வல்லைப் பொலிவொடு வந்தமை யானின்று வான்வழுத்துந்
தில்லைப் பொலிசிவன் சிற்றம் பலஞ்சிந்தை செய்பவரின்
மல்லைப் பொலிவய லூரன்மெய் யேதக்க வாய்மையனே. (திருக். 368)

புனல் வரவுரைத்தல்

என்பது, தலைமகளுடன் மனைவயிற்றங்கி இன்புறா நின்றவன் தோள்களைப்
பரத்தையர் பொருந்தி மகிழப், புதுப்புனல் வந்து பரந்தது, இனிப் புனலாட்டினால் இவன்
காதலி புலக்கும்போலுமென, வையத்தார் தம்முட் புனல்வரவு கூறா நிற்றல்.

(வ-று.)

சூன்முதிர் துள்ளு நடைப்பெடைக் கிற்றுணைச் சேவல்செய்வான்
தேன்முதிர் வேழத்தின் மென்பூக் குதர்செம்ம லூரன்றிண்டோள்
மான்முதிர் நோக்கினல் லார்மகி ழத்தில்லை யானருளே
போன்முதிர் பொய்கையிற் பாய்ந்தது வாய்ந்த புதுப்புனலே. (திருக். 369)

தேர் வரவுகண்டு மகிழ்ந்து கூறல்

என்பது, புனல்வரவு கேட்ட தலைமகன், புனலாட்டு விழவிற்குப் பரத்தையர்
சேரிக்கட் செல்லா நிற்ப, இவனைப் புணர்