பொருளதிகாரம்395முத்துவீரியம்

தற்குத் தக்க தவத்தினை முற்காலத்தே செய்தீர்கள், தேர்வந்து தோன்றிற்று, இனிச்
சென்றிவன் தோளைத் தோய்மினெனத் தேர்வரவு கண்டு பரத்தையர் தம்முள் மகிழ்ந்து
கூறல்.

(வ-று.)

சேயே யெனமன்னு தீம்புன லூரன்றிண் டோளிணைகள்
தோயீர் புணர்தவந் தொன்மைசெய் தீர்சுடர் கின்றகொலம்
தீயே யெனமன்னு சிற்றம் பலவர்தில் லைந்நகர்வாய்
வீயே யெனவடி யீர்நெடுந் தேர்வந்து மேவினதே. (திருக். 370)

புனல்விளையாட்டிற் றம்முளுரைத்தல்

என்பது, தலைமகனுடன் புனலாடா நின்ற பரத்தையர் சேடிமார் அரமங்கையரைப்
போலப் புனலாடா நின்ற அவ்வவரேயென்று விளித்து, நாமெல்லாம் இத்தன்மையேமாக
வானரமங்கையரென்று கூறுமாறு மற்றொருத்தி வந்து இவனைத் திரித்துக் கொள்ளக்
கொடுத்துப் பின் வருந்தாது முன்னுறக் காப்போமெனத் தம்முட்கூறல்.

(வ-று.)

அரமங் கையரென வந்து விழாப்புகும் அவ்வவர்வான்
அரமங் கையரென வந்தணு கும்மவள் அன்றுகிராற்
சிரமங் கையனைச்செற் றோன்றில்லைச் சிற்றம்பலம் வழுத்தாப்
புரமங் கையரினை யாதைய காத்துநம் பொற்பரையே. (திருக். 371)

தன்னை வியந்துரைத்தல்

என்பது, சேடிமார் பின் வருந்தாது முன்னுறக் காப்போமென்று தம்முட் கூறுவதனைக்
கேட்டு, இவனை யமரப்புல்லும் பரத்தையர்மாட் டிவனருள் செல்லாமல்
விலக்கேனாயின், என்மாட்டிவனைத் தந்தழா நின்ற இவன்
மனைக்கிழத்தியாகின்றேனெனப், பரத்தைத் தலைவி தன்னை வியந்துரைத்தல்.

(வ-று.)

கனலூர் கணைதுணை யூர்கெடச் செற்றசிற் றம்பலத்தெம்
அனலூர் சடையோன் அருள்பெற் றவரின் அமரப்புல்லும்