பொருளதிகாரம் | 396 | முத்துவீரியம் |
மினலூர் நகையவர் தம்பா
லருள்விலக் காவிடின்யான்
புனலூ ரனைப்பிரி யும்புன லூர்கணப் பூங்கொடியே. (திருக். 372)
நகைத்துரைத்தல்
என்பது, பரத்தைத் தலைவி தன்னை
வியந்து கூறினாளென்று கேட்ட தலைமகள்,
எங்கைச்சியார் தமக்குமொரு தங்கைச்சியார்
தோன்றின பொழுதே தம் இறுமாப் பொழியத்
தம்முடைய இணை முலைகளின் இறுமாப்பும் ஒழியப்
புகாநின்றன. இதனை அறியாது
தம்மைத் தாம்
வியக்கின்ற தென்னோவெனப், பரத்தையை
நோக்கி நகைத்துக் கூறாநிற்றல்.
(வ-று.)
இறுமாப் பொழியுமன் றேதங்கை
தோன்றினென் எங்கையங்கைச்
சிறுமான் தரித்தசிற் றம்பலத்
தான்றில்லை யூரன்றிண்டோள்
பெறுமாத் தொடுந்தன்ன பேரணுக்
குப்பெற்ற பெற்றியினோ
டிறுமாப் பொழிய இறுமாப் பொழிந்த இணைமுலையே.
(திருக். 373)
நாணுதல்கண்டு மிகுத்துரைத்தல்
என்பது, தலைமகனைப்
பரத்தையர் வசம் புனலாட விட்டுச், சூடுவாரின்றிச்
செப்பின்கண் இட்டடைத்துத் தமியே வைகும்
பூப்போல்வாள், இஃது அவனுக்குத் தகாத
பழியாமெனக் கருதி நாணி அதனை மறைத்திருந்தமை
கண்ட தோழி, இவளது கற்பும்
நலனும் நல்ல
பகுதியை யுடையனவா யிருந்தன வென, அவணலத்தை மிகுத்துக்
கூறாநிற்றல்.
(வ-று.)
வேயாது செப்பின் அடைத்துத்
தமிவைகும் வீயினன்ன
தீயாடி சிற்றம் பலமனை யாடில்லை யூரனுக்கின்
றேயாப் பழியென நாணியென் கண்ணிங்ங னேமறைத்தாள்
யாயா மியல்பிவள் கற்புநற் பால இயல்புகளே. (திருக். 374)
பாணன் வரவுரைத்தல்
என்பது, நாணோடு தனியிருந்து
வருந்துகின்ற தலைமகளுக்கு, இராப்பொழுதின்கட்
சென்று திசையைக் கடக்கும் வாவல் இரை
|