பொருளதிகாரம் | 397 | முத்துவீரியம் |
தேருங் காலமன்மையால்,
பகற்பொழுதின்க ணுறையு மரம்போலுந் தமியோமை
யறியாது
விறலியும் பாணனும் நம் வேந்தற்குத்
துயிலெழு மங்கலம் பாடவந்து நின்றாரெனத், தோழி
பாணன் வரவு கூறல்.
(வ-று.)
விறலியும் பாணனும் வேந்தற்குத்
தில்லை யிறையமைத்த
திறலியல் யாழ்கொண்டு வந்துநின்
றார்சென் றிராத்திசைபோம்
பறலியல் வாவல் பகலுறை மாமரம்
போலுமன்னோ
அறலியல் கூழைநல் லாய்தமி யோமை அறிந்திலரே.
(திருக். 375)
தோழி யியற்பழித்தல்
என்பது, பாணன் வரவுரைத்த தோழி,
இருள்வருந்த அயலாரிடத்து நல்குதலால்
எம்முடைய
வள்ளல் இன்று தக்கிருந்திலனெனத், தலைமகனை
யியற்பழித்தியம்பல்.
(வ-று.)
திக்கின் இலங்குதிண்
டோளிறை தில்லைச்சிற் றம்பலத்துக்
கொக்கின் இறக தணிந்துநின்
றாடிதென் கூடலன்ன
அக்கின் நகையிவள் நைய
அயல்வயின் நல்குதலான்
தக்கின் றிருந்திலன் நின்றசெவ்
வேலெந் தனிவள்ளலே. (திருக். 376)
உழைய ரியற்பழித்தல்
என்பது, தோழி தலைமகனை
யியற்பழித்துக் கூறாநிற்பக் கேட்டு,
தன்மாட்டன்புடை நெஞ்சத்தையுடைய இவள் பேதுற,
இதற்குப் பிரியாமையின் வயலூரன்
வரம்பிலனென,
உழையர் அவனை யியற்பழித்துக் கூறாநிற்றல்.
(வ-று.)
அன்புடை நெஞ்சத் திவள்பே துறவம்
பலத்தடியார்
என்பிடை வந்தமிழ் தூறநின் றாடி இருஞ்சுழியல்
தன்பெடை நையத் தகவழிந் தன்னம் சலஞ்சலத்தின்
வன்பெடை மேற்றுயி லும்வய லூரன் வரம்பிலனே. (திருக். 377)
|