பொருளதிகாரம்400முத்துவீரியம்

தோழி வாயில்வேண்டல்

என்பது, தலைமகளுக்கு அவன் செய்தது கூறிச்சென்று, அன்று நம்புனத்தின்கண்ணே
வந்து யானை கடிந்த விருந்தினர் தாம் தம் பெருமையை நினையாது இன்று நம்
வாயிற்கண் வந்து, வேட்கைப் பெருக்கந் தம்மிடத்துச் சிறப்ப நின்று ஒன்றும் வாய்
திறக்கின்றிலர், இதற்கியான் செய்யுமாறென்னோவெனத், தலைமகளைத் தோழி வாயில்
வேண்டல்.

(வ-று.)

வியந்தலை நீர்வைய மெய்யே யிறைஞ்சவிண் டோய்குடைக்கீழ்
வயந்தலை கூர்ந்தொன்றும் வாய்திற வார்வந்த வாளரக்கன்
புயந்தலை தீரப் புலியூ ரரனிருக் கும்பொருப்பின்
கயந்தலை யானை கடிந்த விருந்தினர் கார்மயிலே. (திருக். 383)

மனையவர் மகிழ்தல்

என்பது, தோழி வாயில் வேண்டத் தலைமகள் துனித்த நோக்கங் கண்டு ஓகை
கொண்டு செல்லவேண்டிக் காதலன் வந்தானெனறியம்பு மளவில், இவளுடைய காவியங்
கண்கள் கழுநீர்ச் செவ்வியை வௌவுதல் கற்றனவென, மனையவர் தம்முள் மகிழ்ந்து
கூறல்.

(வ-று.)

தேவியங் கண்டிகழ் மேனியன் சிற்றம் பலத்தெழுதும்
ஓவியங் கண்டன்ன ஒண்ணுத லாடனக் கோகையுய்ப்பான்
மேவியங் கண்டனை யோவந் தனனென வெய்துயிர்த்துக்
காவியங் கண்கழு நீர்ச்செவ்வி வௌவுதல் கற்றனவே. (திருக். 384)

வாயின் மறுத்துரைத்தல்

என்பது, மனையவர் துனிகண்டு மகிழாநிற்ப, இவனை நமக்குத் தந்தபின்னர்
நம்முடைய ஆயத்தார் முன்னே நங்காத லரின்று நங்கடையைக் கண்டார், இதுவன்றோ
நம்மாட்டவர் அருளெனத், தோழிக்குத் தலைமகள் வாயின் மறுத்துக் கூறல்.