யாப்பதிகாரம் | 416 | முத்துவீரியம் |
(வ-று.)
வந்துழிக் காண்க. (24)
அடிமோனை
886. அடிதொறு முதலெழுத்
தணைந்து வரலடி
மோனை யென்மனார் முழுதுணர்ந் தோரே.
என்பது, அடிதோறு முதலெழுத்
தொன்றிவருவது, அடிமோனைத் தொடையாகும்.
(வ-று.)
மாவும் புள்ளும் வதிவயிற் படர
மாநீர் விரிந்த பூவுங் கூம்ப
மாலைதொடுத்த கோதையுங் கமழ
மாலை வந்த வாடை
மாயோ ளின்னுயிர்ப் புறத்திறுத் தற்றே. (25)
அடியியைபுத் தொடை
887. இறுதி யசையெழுத் தேனு
மொன்றுவ
தடியியை பாமென வறையப் படுமே.
என்பது, இறுதி
அசையேனும் எழுத்தேனும் ஒன்றிவருவது அடியியைபுத்
தொடையாகும்.
(வ-று.)
இன்னகைத் துவர்வாய்க் கிளவியு
மணங்கே
நன்மா மேனிச் சுணங்குமா ரணங்கே
ஆடமைத் தோளி யூடலு மணங்கே
அரிமதர் மழைக்கணு மணங்கே
திருநுதற் பொறித்த திலகமு
மணங்கே. (26)
எதுகை
888. இரண்டா மெழுத்தொன் றுவதெது
கையே.
என்பது, அடிதோறும் இரண்டாமெழுத்
தொன்றிவருவது அடி யெதுகைத்
தொடையாகும்.
(வ-று.)
காலாழ் களரி னரியடுங்
கண்ணஞ்சா
வேலாண் முகத்த களிறு. (குறள்-500) (27)
|