யாப்பதிகாரம் | 418 | முத்துவீரியம் |
இரட்டைத் தொடை
892. ஓரடி முழுது மொருசொல்
லேவரத்
தொடுப்ப திரட்டைத் தொடையெனப்
படுமே.
என்பது, ஓரடிமுழுவதும் ஒருசொல்லே
வருவது இரட்டைத் தொடையாகும்.
(வ-று.)
ஒக்குமே யொக்குமே யொக்குமே
யொக்கும்
விளக்கினுட் சீறெரி யொக்குமே
யொக்குங்
குளக்கொட்டிப் பூவி னிறம். (31)
செந்தொடை
893. செந்தொடை யொவ்வாத்
திறத்தன வாகும்.
என்பது, மோனைமுதலியன பிறவும்
ஒவ்வாது வருவது செந்தொடையாகும்.
(வ-று.)
பூத்த வேங்கை வியன்சினை
யேறி
மயிலின மகவு நாட
னன்னுதற் கொடிச்சி மனத்தகத்
தோனே. (32)
இணைத்தொடை
894. இணையிரு சீர்மிசை யெய்துவ
தாகும்.
என்பது, முதலிரு சீரக்கண்ணு
மோனை முதலியவைந்தும் வருவது இணைத்
தொடையாகும்.
(வ-று.)
அணிமல ரசோகின் தளிர்நலங்
கவற்றி
இணைமோனை
மொய்த்துடன் றவழு முகிலே பொழிலே
இணையியைபு
பொன்னின் அன்ன பொறிசுணங்
கேந்தி
இணையெதுகை
|