யாப்பதிகாரம்428முத்துவீரியம்

என்பது, அச்செப்பலோசை ஏந்திசைச் செப்பலெனவும், தூங்கிசைச் செப்பலெனவும்,
ஒழுகிசைச் செப்பலெனவும் மூன்று வகைப்படும். (13)

ஏந்திசைச் செப்பல்

914. வெண்சீர் வெண்டளை யான்வரும் பாவே
     ஏந்திசைச் செப்ப லென்மனார் புலவர்.

என்பது, வெண்சீர் வெண்டளையான் வருஞ்செய்யுள் ஏந்திசைச்
செப்பலோசையாகும்.

(வ-று.)

யாதானு நாடாமா லூராமாலென் னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு. (குறள்-397) (14)

தூங்கிசைச் செப்பல்

915. இயற்சீர் வெண்டளை யான்வரும் பாவே
     தூங்கிசை யாமெனச் சொல்லப் படுமே.

என்பது, இயற்சீர் வெண்டளையான் வருஞ்செய்யுள் தூங்கிசைச்
செப்பலோசையாகும்.

(வ-று.)

பாலொடு தேன்கலந் தற்றே பனிமொழி
வாலெயி றூறிய நீர். (15)

ஒழுகிசைச் செப்பல்

916. வெண்சீ ரியற்சீர் விரவி யொழுகுவ
     தொழுகிசை யென்மனா ருணர்ந்திசி னோரே.

என்பது, வெண்சீர் வெண்டளையும் இயற்சீர் வெண்டளையும் விரவிவருஞ் செய்யுள்
ஒழுகிசைச் செப்பலோசையாகும்.

(வ-று.)

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவ
னற்றா டொழாஅ ரெனின். (குறள்-2) (16)