யாப்பதிகாரம் | 429 | முத்துவீரியம் |
குறட்டாழிசை
917. இரண்டடி யாயீற்
றடிசீர்
குறைநவுஞ்
செந்துறைப் பாட்டிற் சிதைந்து
வருநவுஞ்
சந்தழி குறளுந் தாழிசைக் குறளே.
என்பது, இரண்டடியாய்
முதலடியளவிற்கு இறுதியடியொரு சீரேனுஞ் சிலசீரேனுங்
குறைந்து வருவனவும்
செந்துறைப்பாவிற் சிதைந்து வருவனவும் குறள் வெண்பாவினோசை
கெட்டுவருவனவும் குறட்டாழிசையாகும்.
(வ-று.)
நண்ணு வார்வினை நைய நாடொறு நற்ற
வர்க்கர சாய ஞானநற்
கண்ணி னானடி யேயடை வார்கள்கற்
றவரே!
ஈற்றடி குறைவு.
பிண்டியி னீழற் பெருமான்
பிடர்த்தலை
மண்டிலந் தோன்று மால்வாழி
யன்னாய்!
குறட்செந்துறைச் சிதைவு.
வண்டார் பூங்கோதை
வரிவளைக்கைத் திருநுதலாள்
பண்டைய ளல்லள் படி!
குறள் வெண்பாவிற் சிதைவு. (17)
குறள்வெண் செந்துறை
918. தம்முள் ளளவொத்
தளவடி யிரண்டாய்
விழுமிய பொருளு மொழுகிய வோசையும்
ஆய்வரல் குறள்வெண் செந்துறை
யாகும்.
என்பது, தம்முள் அளவொத்து
நாற்சீரடி இரண்டாய் விழுமிய பொருளும் ஒழுகிய
வோசையுமாய் வருவது குறள்வெண் செந்துறை யாகும்.
(வ-று.)
கொன்றை வேய்ந்த செல்வ
னடியிணை
என்று மேத்தித் தொழுவோ மியாமே.
(18)
|