| எழுத்ததிகாரம் | 43 | முத்துவீரியம் |  
  
இதுவுமது 
152. உ, ஊ, விறுதிமுன், உ, ஊ, வரினே 
    இருமையுங் கெடவூ வேற்கு மென்ப. 
(இ-ள்.) உகர ஊகாரங்களை
இறுதியாகிய மொழிக்கு முன், உகர ஊகாரங்களை 
முதலாகிய சொல்வரின் நிலைமொழி யிறுதியும்
வருமொழி முதலுங்கெட்டு ஊகாரம் வரும். 
(வ-று.) குரு + உபதேசம் =
குரூபதேசம். சுயம்பூ + உபதேசம் = சுயம்பூபதேசம் 
எனவரும். (38) 
குணசந்தி 
153. அ, ஆ, விறுதிமுன், இ, ஈ, வரினே 
     இருமையுங் கெடவே யேற்கு மென்ப. 
(இ-ள்.) அகர ஆகாரங்களை
இறுதியாகிய மொழிக்கு முன், இகர ஈகாரங்களை 
முதலாகிய சொல்வரின் நிலைமொழி யிறுதியும்
வருமொழி முதலுங்கெட்டு ஏகாரம் வரும். 
(வ-று.) நர + இந்திரன் =
நரேந்திரன். உமா + ஈசன் = உமேசன் எனவரும். (39) 
இதுவுமது 
154. அ, ஆ, விறுதிமுன் உ, ஊ, வரினே 
     இருமையுங் கெடவோ வெய்து மென்ப. 
(இ-ள்.) அகர ஆகாரங்களை
இறுதியாகிய மொழிக்கு முன், உகர ஊகாரங்களை 
முதலிலேயுடைய சொல்வரின் நிலைமொழி யிறுதியும்
வருமொழி முதலுங்கெட்டு ஓகாரம் 
வரும். 
(வ-று.) தாம + உதரன் =
தாமோதரன். கங்கா + உற்பத்தி = கங்கோற்பத்தி
எனவரும். 
(40) 
விருத்தி சந்தி 
155. அ, ஆ, விறுதிமுன் எ, ஐ, வரினே 
     இருமையுங் கெடவை யெய்து மென்ப. 
(இ-ள்.) அகர ஆகாரங்களை
இறுதியாகிய மொழிக்கு முன், எகர ஐகாரங்களை 
முதலிலேயுடைய சொல்வரின் நிலைமொழியிறுதியும்
வருமொழி முதலுங்கெட்டு ஐகாரம் 
வரும். 
			
				
				 |