யாப்பதிகாரம்430முத்துவீரியம்

வெண்டாழிசை

919. மூன்றடி யாயீற் றடிமுச் சீராய்
    வருநவு மொருபொருண் மேன்மூன் றடுக்கி
    வருநவும் வெள்ளொத் தாழிசை யாகும்.

என்பது, மூன்றடியாய் ஈற்றடி முச்சீராக வருவனவும் ஒரு பொருண்மேன் மூன்றடுக்கி
வருவனவும் வெண்டாழிசை யாகும்.

(வ-று.)

நண்பி தென்று தீய சொல்லார்
முன்பு நின்று முனிவு செய்யார்
அன்பு வேண்டு பவர்.

ஈற்றடி முச்சீர்.

அன்னா யறங்கொ னலங்கிளர் சேட்சென்னி
ஒன்னா ருடைபுறம் போல நலங்கவர்ந்து
துன்னான் றுறந்து விடல்.

ஏடீ யறங்கொ னலங்கிளர் சேட்சென்னி
கூடா ருடைபுறம் போல நலங்கவர்ந்து
நீடான் றுறந்து விடல்.

பாவா யறங்கொ னலங்கிளர் சேட்சென்னி
மேவா ருடைபுறம் போல நலங்கவர்ந்து
காவான் றுறந்து விடல்.

ஒரு பொருண்மேன் மூன்றடுக்கு. (19)

வெண்டுறை

920. மூன்றடி முதலா யேழடி காறும்வந்
     தீற்றடி சிற்சில சீர்தப நிற்பினும்
     வேற்றொலி விரவினும் வெண்டுறை யாகும்.

என்பது, மூன்றடி முதல் ஏழடி யிறுதியாகவும் வந்து சிலசீர் ஈற்றடியிற் குறைந்து
வரினும் வேற்றொலி விரவினும் வெண்டுறையாகும்.