யாப்பதிகாரம்431முத்துவீரியம்

(வ-று.)

தாளாள ரல்லாதார் தாம்பல ராயக்கா லென்னா மென்னாம்
யாளியைக் கண்டஞ்சி யானைதன் கோடிரண்டும்
பீலிபோற் சாய்ந்துவிடும் பிளிற்றி யாங்கே.

பிறவும் வந்துழிக் காண்க. (20)

வெளி விருத்தம்

921. அளவடி யாயநான் கடிமூன் றடியாய்
    அடியடி தோறும் தனிச்சொற் பெற்று
    வருவது வெளிவிருத் தம்மா கும்மே.

என்பது, நாற்சீரடி நான்கடியேனும் மூன்றடியேனும் வந்து அடிகடோறுந் தனிச்சொற்
பெற்று வருவது வெளிவிருத்தமாகும்.

(வ-று.)

ஆவா வென்றே யஞ்சின ராழ்ந்தா ரொருசாரார்
கூகூ வென்றே கூவிளி கொண்டா ரொருசாரார்
மாமா வென்றே மாய்ந்தனர் நீந்தா ரொருசாரார்
ஏகீர் நாகீ ரென்செய்து மென்றா ரொருசாரார்.

மூன்றடி வந்துழிக் காண்க. (21)

அகவற்பா

922. அகவ லோசை யொடுமள வடித்தாய்
     வருவ தகவற் பாவென மொழிப.

என்பது, அகவலோசையைத் தழுவி நாற்சீரடியாக வருவது ஆசிரியப்பாவாகும். (22)

923. அதுதான்
     ஈற்றய லடிமுச் சீராய் வருவது
     நேரிசை யகவற் பாவா கும்மே.

என்பது, அவ்வாசிரியப்பா, ஈற்றுக்கயலடி மூன்று சீராக வருவது நேரிசை
யகவற்பாவாகும்.

(வ-று.)

போது சாந்தம் பொற்ப வேந்தி
ஆதி நாதற் சேர்வோர்
சோதி வானந் துன்னு வோரே. (23)