யாப்பதிகாரம் | 432 | முத்துவீரியம் |
நிலைமண்டில ஆசிரியப்பா
924. எல்லா வடியுமொத் திறினிலை
மண்டில
அகவ லென்மனார் அறிந்திசி
னோரே.
என்பது, அடிகளெல்லா மொத்துவருவது
நிலை மண்டில அகவற்பாவாகும்.
(வ-று.)
கடம்பணி தொடையன்
மிடைந்த தடந்தோள்
வன்றிற லெஃக மேந்திய லேவன்
கொன்றையன் சடிலத் தாசான் மன்ற
பற்றினர் பையுட் பற்றீ தென்னே.
(24)
இணைக்குற யாசிரியப்பா
925. ஆதியு மந்தமு மளவடி யாகி
குறளடி சிந்தடி யென்றாங் கிரண்டும்
இடைவர லிணைக்குற ளாசிரி யம்மே.
என்பது, முதலடியும் கடையடியும்
நாற்சீரடியாய் இடையடி இருசீரடியும்
முச்சீரடியுமாய் வருவது இணைக்குற ளகவற்
பாவாகும்.
(வ-று.)
நீரின் றண்மையுந்
தீயின் வெம்மையுஞ்
சாரச் சாரச் சார்ந்து
தீரத் தீரும்
சாரனாடன் கேண்மை
சாரச் சாரச் சார்ந்து
தீரத் தீரத் தீர்பொல் லாதே. (25)
அடிமறி மண்டில ஆசிரியப்பா
926. மூன்றடி முதலா முடிந்தெலா
வடியும்
இடைக டைமுத லாயெடுத் தாலும்
ஓசையும் பொருளு முலவாது வருவன
அடிமறி மண்டில வகவலா கும்மே.
|