யாப்பதிகாரம் | 434 | முத்துவீரியம் |
வருநவு மிடையிடை குறைந்து வருநவும்
இடையிடை குறைந்திடை மடக்காய்
வருநவும்
அகவற் றுறையென வறையப் படுமே.
என்பது, நான்கடியா ஈற்றயலடி
குறைந்து வருவதும் ஈற்றயலடி குறைந்
திடைமடக்காக
வருவதும் இடையிடை குறைந்து வருவதும் இடையிடை
குறைந்து இடை
மடக்காக வருவதும் அகவற்றுறை
யாகும்.
(வ-று.)
கரைபொரு கான்யாற்றங்
கல்லத ரெம்முள்ளி வருவீராயின்
அரையிருள் யாமத் தடுபுலியே றஞ்சி யகன்றுபோக
நரையுறு மேறு நுங்கை வேலஞ்சுது நும்மை
வரையர மங்கையர் வௌவுத லஞ்சுதும்
வாரலையோ.
பிறவும் வந்துழிக் காண்க. (28)
ஆசிரிய விருத்தம்
929. கழிநெடி லடிநான் கொத்திறி
னகவல
விருத்த மென்மனார் மெய்யுணர்ந்
தோரே.
என்பது, ஆறுசீர் முதல்
பதின்சீரிறுதியாகிய கழி நெடிலடி நான்கடியா
யொத்துவருவது அகவல் விருத்தமாகும்.
(வ-று.)
பையர வணிந்த வேணிப் பகவனே யனைய
தங்க
ளையனாம் வியாழப் புத்தே ளாயிடை
யடைந்தா னாகச்
செய்யதாள் வழிபா டின்றித்
தேவர்கோ னிருந்தா னந்தோ
தையலார் மயலிற் பட்டார்
தமக்கொரு மதிதா னுண்டோ.
(திருவிளையாடல் - இந்திரன்பழி)
பிறவும் வந்துழிக் காண்க. (29)
அகவலோசையின் வகை
930. அகவ லேந்திசை யகவ
றூங்கிசை
அகவ லொழுகிசை யகவல்மூ வகைப்படும்.
என்பது, அகவலோசை ஏந்திசையகவலும்
தூங்கிசையகவலும் ஒழுகிசையகவலு
மென மூன்றுவகைப்படும். (30)
|