யாப்பதிகாரம் | 436 | முத்துவீரியம் |
கலிப்பா
934. அளவடி யாய்த்துள
லமைந்து வருவது
கலியா மென்மனார் கற்றுணர்ந்
தோரே.
என்பது, அடிநாற்சீராய்
துள்ளலோசையை யுடைத்தாய் வருவது
கலிப்பாவாகும். (34)
ஒத்தாழிசைக்கலி
935. அதுதான்,
தரவு தாழிசை தனிச்சொற் சுரிதகம்
எனுநான் குறுப்பின தொத்தா ழிசைக்கலி.
என்பது, அக்கலிப்பாவினுள் ஒரு
தரவும் மூன்று தாழிசையும் தனிச்சொல்லுமாகிய
நான்குறுப்போடும் வருவது, நேரிசையொத்
தாழிசைக் கலிப்பாவாகும்.
(வ-று.)
வாணெடுங்கண் பனிகூர
வண்ணம்வே றாய்த்திரிந்து
தோணெடுந் தகைதுறந்து துன்பங்கூர் பசப்பினவாற்
பூணொடுங்கு முலைகண்டும் பொருட்பிரிதல் வலிப்பவோ
சூருடைய கடுங்கடங்கள் சொலற்கரிய வென்பவாற்
பீருடைய நலந்தொலையப் பிரிவரோ பெரியவரே
சேணுடைய கடுங்கடங்கள் செலற்கரிய வென்பவால்
நாணுடைய நலந்தொலைய நடப்பரோ நல்லவரே
சிலம்படைந்த வெங்கானஞ் சீரிலவே யென்பவாற்
புலம்படைந்த நலந்தொலையப் போவரோ பொருளிலரே.
எனவாங்கு,
அருளெனு மிலராய்ப்
பொருள்வயிற்
பிரிவோர்
பன்னெடுங் காலமும் வாழியர்
பொன்னொடுந் தேரொடுந் தானையிற் பொலிந்தே. (35)
அம்போதரங்க வொத்தாழிசைக்
கலிப்பா
936. அளவடி சிந்தடி குறளடி யாகும்
அசையடி யாகிய வம்போ தரங்க
உறுப்பைத் தாழிசை தனிச்சொற்
கிடையிற்
கொண்டு தரவு தாழிசை யம்போ
தரங்கந் தனிச்சொற் சுரிதக
மென்னும்
|