யாப்பதிகாரம்439முத்துவீரியம்

குடவரைவேய்த் தோளிணைகள் குளிர்ப்பிப்பான் றமியையாத்
தடமலர்த்தா ரருளுநின் றகுதியுந் தகுதியோ.
தாதுறு முறிசெறி தடமல ரிடையிடைத் தழலெனவிரி
வனபொழில், போதுறு நறுவிரை புதுமலர் தெரிதரு
கருநெய்தல் விரிவனகழி, தீதுறுதிறமறு கெனநனி
முனிவன துணையொடு பிணைவனதுறை, மோதுறு
ஒலிகலி நுரைதரு திசையொடு கடிதொடர் புடையதுகடல்.
கொடுந்திற லுடையன சுறவேறு கோட்பதனால்
இடுங்கழி யிராவருதல் வேண்டாவென் றிசைத்திலமோ,
கருநிறத் துறுதொழிற் கராம்பெரி துடைமையா
இருணிறத் தொருகானி லிராவார லென்றிலமோ.
நாணொடு கழிந்தன்றாற் பெண்ணரசி நலத்தகையே
துஞ்சலு மொழிந்தன்றாற் றொடித்தோளி தடங்கண்ணே,
அரற்றொடு கழிந்தன்றா லாரிருளு மாயிழைக்கே
நயப்பொடு கழிந்தன்றா னனவது நன்னுதற்கே,
அத்திறத்தா லசைந்தனதோ ளலர்தற்கு மெலிந்தனகண்
பொய்த்துரையாற் புலர்ந்ததுமுகம் பொன்னிறத்தாற் போர்த்தனமுலை
அழலினா லசைந்தனநகை யணியினா லொசிந்ததிடை
குழலினா னிமிர்ந்ததுமுடி குறையினாற் கோடிற்றுநிறை
உட்கொண்ட தகைத்தொருபா லுலகறிந்த வலற்றொருபால்
கட்கொண்ட றுளித்தொருபால் கழிவெய்தும் படிற்றொருபால்
பரிவுறூஉந் தகைத்தொருபால் படிவுறூஉம் பசப்பொருபால்
இரவுறூஉந் துயரொருபால் இளிவந்த வெணிற்றொருபால்
மெலிவுறூஉந் தகையொருபால் விளர்ப்புவந் தடைந்தொருபால்
பொலிவுசென் றகன்றொருபால் பொறைவந்து கூர்ந்தொருபால்
காதலிற் கதிர்ப்பொருபால் கட்படாத் துயரொருபால்
ஏதில்சென் றணைந்தொருபா லியனாணிற் செறிவொருபால்.

எனவாங்கு,

இன்னதிவ் வழக்க மித்திற மிவணலம்
என்னவு முன்னாட் டுன்னா யாகிற்
கலந்தவ ணிலைமை யாயினு நலந்தகக்
கிளையொடு கெழீஇய தளையவிழ் கோதையைக்
கற்பொடு காணியம் யாமே
பொற்பொடு பொலிகநும் புணர்ச்சி தானே. (37)

தரவுக் கொச்சகக் கலிப்பா

938. தரவுக்கொச் சகமொரு தரவொடு போதரும்.