யாப்பதிகாரம் | 440 | முத்துவீரியம் |
என்பது, ஒருதரவொடு வருவது தரவுக்
கொச்சகக் கலிப்பாவாகும்.
(வ-று.)
செல்வப்போர்க்
கதக்கண்ணன் செயிர்த் தெறிந்த சினவாளி
முல்லைத்தார் மறமன்னர் முடித்தலையை முருக்கிப்போய்
எல்லைநீர் வியன்கொண்மூ விடைநுழையு மதியம்போன்
மல்லலோங் கெழில்யானை மருமம்பாய்ந் தொளித்ததே. (38)
தரவிணைக் கொச்சகக் கலிப்பா
939. தரவிணைக் கொச்சகந் தானிரு
தரவொடு
தனிச்சொற் சுரிதகந் தழுவியும்
வருமே.
என்பது, இரண்டு தரவும்
தனிச்சொல்லும் சுரிதகமும் ஆகிய மூன்றுறுப்
பொடும்
வருவது தரவிணைக் கொச்சகக் கலிப்பாவாகும்.
(வ-று.)
வடிபடுவெவ் வேறிகழு
மதரரிய நெடுந்தடங்கட்
கொடிபுனைந்தான் விறற்சேவற் கொடிபுனைந்தா
னீதென்னே
கடிபடுதண் டார்விரவுங் கரியகுழற் குறவர் குலம்
ஒடிவினெடுந் தவநெறிகூர்ந் துயங்கியதா லஞ்ஞான்று
மிடிபடுநுண் ணிடைதயங்கு மின்னாரை மணத்துமென்னும்
படிபடுநீ ளருண்முறையாற் பயிலுமண
மாமன்றே. (39)
சிஃறாழிசைக் கொச்சகக்
கலிப்பா
940. தரவொரு தாழிசை மூன்று
தனிச்சொற்
சுரிதக நான்கின வாஞ்சிஃ றாழிசை.
என்பது, ஒரு தரவும் மூன்று
தாழிசையும் தனிச்சொல்லும் சுரிதகமு மாகிய
நான்குறுப்போடும் வருவது சிஃறாழிசைக்
கொச்சகக்கலிப்பாவாகும்.
(வ-று.)
பரூஉத்தடக்கை மதயானைப் பணை
யெருத்தின்
மிசைத் தோன்றிக், குரூஉக்கொண்ட
வெண்குடைக் கீழ்க்
குடை மன்னர் புடைசூழப், படைப் பரிமான்
றேரினொடும் பரந்துலவு
மறுகினிடைக், கொடித்தானை
யிடைப்பொலிந்தான் கூடலார்
கோமானே,
|