யாப்பதிகாரம் | 441 | முத்துவீரியம் |
ஆங்கொரு சார், உச்சியார்க்
கிறைவனா யுலகமெல்லாங்
காத்தளிக்கும், பச்சையா
மணிப்பைம் பூட்
புரந்தரனாப் பாவித்தார்,
வச்சிரங்காணாத காரணத்தான்
மயங்கினரே ஆங்கொரு சார், அக்கால
மணி நிரைகாத் தருவரையாற் பனிதவிர்த்து
வக்கிரனை வடிவழித்த மாயவனாப் பாவித்தார்
சக்கரங் காணாத காரணத்தாற் சமழ்த்தனரே,
ஆங்கொரு சார், மால்கொண்ட பகை தணிப்பான்
மாத்தடிந்து மயங்காச்செங், கோல்கொண்ட
சேவலங் கொடியவனாப் பாவித்தார், வேல்கொண்ட
தின்மையால் விம்மிதராய் நின்றனரே அஃதான்று,
கொடித்தே ரண்ணல் கொற்கைக்
கோமான்
நின்புக ழொருவன் செம்பூட் சேஎய்
என்றுநனி யறிந்தனர் பலரே தானு
மைவரு ளொருவனென் றறிய லாகா
மைவரை யானை மடங்கா வென்றி
மன்னவன் வாழியென் றேத்தத்
தென்னவன் வாழி திருவொடும்
பொலிந்தே. (40)
@@@@@@
பஃறாழிசைக் கொச்சகக்
கலிப்பா
961. தரவொன்று தாழிசை யாறு
தனிச்சொற்
சுரிதக நான்கின வாம்பஃ றாழிசை.
என்பது, ஒரு தரவும் ஆறு தாழிசையும்
தனிச் சொல்லும் சுரிதகமும் ஆகிய
நான்குறுப்போடும் வருவது பஃறாழிசைக்
கொச்சகக் கலிப்பாவாகும்.
(வ-று.)
தண்மதியேர் முகத்தாளைத்
தனியிடத்து நனிகண்டாங்கு
உண்மதியு முடைநிறையு முடன்றளர முந்நாட்கண்
கண்மதியொப் பிவையின்றிக்
காரிகையை நிறைகவர்ந்து
பெண்மதியின் மகிழ்ந்தநின்
பேரருளும் பிறிதாமோ.
இளநல மிவள்வாட விரும்பொருட்குப் பிரிவாயேல்
தளநல முகைவெண்பற் றாழ்குழ றளர்வாளே,
தகைநல மிவள் வாடத்
தரும்பொருட்குப் பிரிவாயேல்
வகைநல மிவள்வாடி வருந்தியில்
லிருப்பாளோ,
அணிநல மிவள்வாட வரும்பொருட்குப் பிரிவாயேல்
மணிநல மகிழ்மேனி மாசோடு மடிவாளே.
நாம்பிரியே மினியென்று
நறுநுதலைப் பிரிவாயேல்
ஓம்பிரியோ மெனவுரைத்த
வுயர்மொழியும் பழுதாமோ.
|