யாப்பதிகாரம்442முத்துவீரியம்

குன்றளித்த திரடோளாய் கொய்புனத்திற் கூடியநாள்
அன்றளித்த வருண்மொழியா வருளுவது மருளாமோ,
சிலபகலு மூடியக்காற் சிலம்பொலிச்சீ றடிபரவிப்
பலபகலுந் தலையளித்த பணிமொழியும் பழுதாமோ.

எனவாங்கு,

அரும்பெற லிவளினுந் தரும்பொரு ளதனினும்,
பெரும்பெற லரியன வெறுக்கையு மற்றே,
அதனால், விழுமிய தறிமதி வாழி,
கெழுமிய காதலிற் றரும்பொருள் சிறிதே. (41)

மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா

942. மயங்கி வருவது மயங்கிசைச் கொச்சகக்
     கலியா மென்மனார் கற்றுணர்ந் தோரே.

என்பது, தரவு முதலிய ஆறுறுப்பையும் பெற்று முறைமாறி வருவது மயங்கிசைக்
கொச்சகக் கலியாகும்.

(வ-று.) வந்துழிக் காண்க. (42)

வெண்கலிப்பா

943. கலித்தளை தட்டுக் கலியொலி விரவியும்
     வெண்டளை தட்டு வெள்ளொலி தழுவியு
     மீற்றடி சிந்தடி யாய்வரல் வெண்கலிப்
     பாவா மெனப்பெயர் பகரப் படுமே.

என்பது, கலித்தளை விரவிக் கலியோசையைத் தழுவியும் வெண்டளை விரவி
வெள்ளோசையைத் தழுவியும் ஈற்றடிமுச்சீரான் வருவது வெண்கலிப்பாவாகும்.

(வ-று.)

வாளார்ந்த மழைத்தடங்கண் வனமுலைமேல் வம்பனுங்கக்
கோளார்ந்த பூணாகங் குழைபுரளக் கோட்டெருத்தின்
மாலைதாழ் கூந்தலார் வரன்முறையான் வந்தேத்தச்
சோலைதாழ் பிண்டிக்கீழ்ச் சூழ்ந்தவர்தஞ் சொன்முறையான்
மனையறமுந் துறவறமு மண்ணவர்க்கும் விண்ணவர்க்கும்
வினையறுக்கும் வகைதெரிந்து வீடொடுகட் டிவையுரைத்த
தொன்மைசால் கழிகுணத்தெந் துறவரசைத் தொழுதேத்த
நன்மைசால் வீடெய்து மாறு. (43)