யாப்பதிகாரம் | 443 | முத்துவீரியம் |
துள்ள லோசையின் வகை
944. துள்ள லேந்திசை பிரிந்திசை
யகவல்
எனமூ வகைப்படு மென்மனார் புலவர்.
என்பது, முற்கூறியவற்றுள்
துள்ளலோசை, ஏந்திசைத் துள்ளலும் பிரிந்திசைத்
துள்ளலும் அகவற்றுள்ளலு மென மூவகைப்படும். (44)
ஏந்திசைத் துள்ளல்
945. ஏந்திசைத் துள்ள லியையின்
கலித்தளை.
என்பது, கலித்தளையான்
வருஞ்செய்யுள் ஏந்திசைத் துள்ள லோசையாகும்.
(வ-று.)
திருவனைய கருநெடுங்கட்
சிலைநுதலார் மயல்வலையில்
இருநிலக்கண் விழுந்துழலு மெளியவனை யெடுத்தன்பிற்
பொருவரிய நினதடியாற் புகழுரைத்துத் தினமகக்கட்
பரவவருள் புரிவாய்கொல்
பசுபதியெம் பெருமானே. (45)
பிரிந்திசைத் துள்ளல்
946. வெண்டளை தன்றளை
விரவி வருவது
பிரிந்திசைத் துளலெனப் பேசப்
படுமே.
என்பது, வெண்சீர் வெண்டளையும்
கலித்தளையும் விரவிவருஞ் செய்யுள்
பிரிந்திசைத் துள்ள லோசையாகும்.
(வ-று.)
வாளார்ந்த மழைத்தடங்கண்
வனமுலைமேல் வம்பனுங்கக்
கோளார்ந்த பூணாகங் குழைபுரளக்
கோட்டெருத்தின். (46)
அகவற்றுள்ளல்
947. இவ்விரு தளையும் பிறவு
மயங்கித்
தொடருவ தகவற் றுள்ளலா மெனலே.
என்பது, வெண்சீர் வெண்டளையும்
கலித்தளையும் பிறதளைகளும் விரவிவருவது
அகவற்
றுள்ளலோசையாகும்.
|