யாப்பதிகாரம்444முத்துவீரியம்

(வ-று.)

நேரலார் போரேறே நிடதத்தார் கோமானே
ஆர வரைமார்பா வடியே னுயிர்க்குயிரே
காரிருளில் யான்புலம்பக் கானகத்தில் விட்டகன்று
சாரலையா யின்னு மிதுவோநின் றண்ணளியே. (47)

கலித்தாழிசை

948. இரண்டடி யாயிற் றடிநீண் டிசைப்பது
     கலித்தா ழிசையெனக் கருதப் படுமே.

என்பது, இரண்டடியாக ஈற்றடி நீண்டொலிப்பது கலித்தாழிசை யாகும்.

(வ-று.)

வாயிற் சிவப்பை விழிவாங்க மலர்க்கண் வெளுப்பை வாய்வாங்கத்
தோயக் கலவி யமுதளீப்பீர் துங்கக் கபடாந் திறமினோ. (48)

இதுவுமது

949. ஒருபொருண் மேன்மூன் றடுக்கி யிரண்டடி
     ஆக வருவஃ ததன்சிறப் பாகும்.

என்பது, முற்கூறிய கலித்தாழிசை யிரண்டடியாய் ஒரு பொருண்மேன் மூன்றடுக்கி
வருவது சிறப்பாகும்.

(வ-று.)

கொய்தினை காத்துங் குழவி யடுக்கத்தெம்
பொய்தற் சிறுகுடில் வாரனீ யைய நலம்வேண்டின்
ஆய்தினை காத்து மருவி யடுக்கத்தெம்
மாசில் சிறுகுடில் வாரனீ யைய நலம்வேண்டின்
மென்றினை காத்து மிகுபூங் கமழ்சோலைக்
குன்றச் சிறுகுடில் வாரனீ யைய நலம்வேண்டின். (49)

கலித்துறை

950. ஐஞ்சீ ரடிநான் காயள வொத்து
     வருவது கலித்துறை யாம்வழுத் திடினே.