யாப்பதிகாரம்445முத்துவீரியம்

என்பது, ஐஞ்சீரடி நான்காகத் தம்முள் அளவொத்து வருவது கலித்துறையாகும்.

(வ-று.)

விலகி வில்லுமிழ் விரிகதிர் மணிபல வரன்றிப்
பொலன் முகட்டுயர் பொன்னெடுங் குன்றின்வீ ழருவி
குலவு வெண்டிரைக் குரைகட லுடுத்தபார் மடந்தை
அலர்மு லைத்தலைத் துயல்வரு மாரமொத் துளதால். (50)

கலிவிருத்தம்

951. அளவடி நான்காய் வரல்கலி விருத்தம்.

என்பது, நாற்சீரடி நான்காகத் தம்முள் அளவொத்து வருவது கலிவிருத்தமாகும்.

(வ-று.)

உலகெலா முணர்ந் தோதற் கரியவ
னிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதிய னம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம். (பெரிய புராணம்-1) (51)

வஞ்சிப்பா

952. தூங்க லிசையன வஞ்சி மற்றவை
     குறளடி சிந்தடி கொடுவரு மெனலே.

என்பது, தூங்க லோசையை யுடையனவாயிரு சீரடியும் முச்சீரடியும் பெற்று
வஞ்சிப்பா வரும். (52)

குறளடி வஞ்சிப்பா

953. இருசீ ரடியெனைத் தானும் வந்து
     தனிச்சொற் பெற்ற கவற்சுரி தகத்தால்
     வருவது குறளடி வஞ்சி யாகும்.

என்பது, இரு சீரடி பல வடியானும் வந்து தனிச்சொற் பெற்று அகவற் சுரிதகத்தால்
வருவது குறளடி வஞ்சிப்பாவாகும்.