யாப்பதிகாரம்446முத்துவீரியம்

(வ-று.)

பூந்தாமரைப் போதலமரத்
தேம்புனலிடை மீன்றிரிதரும்
வளவயலிடைக் களவயின்மகிழ்
வினைக்கம்பலை மனைச்சிலம்பவு
மனைச்சிலம்பிய மணமுரசொலி
வயற்கம்பலைக் கயலார்ப்பவும்,

நாளும்,

மகிழு மகிழ்தூஉங் கூரன்
புகழ்த லானாப் பெருவண் மையனே. (53)

சிந்தடி வஞ்சிப்பா

954. சிந்தடி யாகத் தனிச்சொற் பெற்றே
     அகவற் சுரிதகத் தாலே முடிவது
     சிந்தடி வஞ்சியாஞ் செப்புங் காலே.

என்பது, முச்சீரடியாகப் பலவடி வந்து தனிச்சொல் நடுவிற்பெற்று ஆசிரியச்
சுரிதகத்தான் முடிவது சிந்தடி வஞ்சிப் பாவாகும்.

(வ-று.)

கொடியவாலன குருநிறத்தன குறுந்தாளன
வடிவாலெயிற் றழலுளையன வள்ளுகிரன
பணையெருத்தி னிணையரிமா னணையேறித்
துணையிலாத் துறவுநெறிக் கிறைவனாகி
எயினடுவ ணினிதிருந் தெல்லோர்க்கும்
பயில்படுவினை பத்திமையிற் சொன்னோன் புணையெனத்
திருவுறு திருந்தடி திசைதொழ
விரிவுறு நாற்கதி வீடுநனி யெளிதே. (54)

தூங்கலோசையின் வகை

955. தூங்க லேந்திசை பிரிந்திசை யகவல்
     ஆகு மென்மனா ரறிந்திசி னோரே.

என்பது, தூங்கலோசை, ஏந்திசைத் தூங்கலும், பிரிந்திசைத் தூங்கலும், அகவற்
றூங்கலுமென மூன்றுவகைப்படும்.