யாப்பதிகாரம் | 455 | முத்துவீரியம் |
தேமாங் கனிசிதறி வாழைப்
பழங்கள் சிந்தும்
ஏமாங் கதமென் றிசையாற்
றிசைபோய தன்றே. (சீவக சிந்தாமணி)
ய.
கார்க்கொடி முல்லையுங் கலந்து
மல்லிகை
பூக்கொடிப் பொதும்ப ருங்கானல்
ஞாழலும்.
ர.
ஆவே றுருவின வாயினு மாபயந்த
பால்வே றுருவின
வல்லவாம்-பால்போல்.
ல.
வாழ்கின்றே மென்று
மகிழன்மின் வாணாளும்
போகின்ற பூழையே போன்று.
ழ. (18)
தரவு தாழிசைகட்கு அடிவரையறை
980. அம்போ தரங்கவண்
ணகவொத் தாழிசைக்
கலியல் லாத கலிப்பா வினுக்குத்
தரவு மூன்றடி சிறுமை பெருமை
உரைப்போன் குறிப்பின வாமள
வின்றே.
என்பது, அம்போதரங்க
வொத்தாழிசைக் கலியும் வண்ணக வொத்தாழிசைக்
கலியுமல்லாத
கலிப்பாவிற்குத் தரவு மூன்றடியே சிறுமை, பெருமை
பாடுவோன்
பொருண்முடிவின் குறிப்பே,
அளவின்றாம். (19)
அம்போதரங்க, வண்ணக
வொத்தாழிசைக் கலிகளின் தரவிற்கு
அடிவரையறை
981. அம்போ தரங்கவண்
ணகக்குஞ் சிறுமை
பெருமை தரவிணைப் பேசுங் காலை
ஆறடி யென்மனா ரறிந்தி சினோரே.
என்பது,
அம்போதரங்கவொத்தாழிசைக் கலிக்கும்
வண்ணக வொத்தாழிசைக்
கலிக்கும் பெருமை
சிறுமையில்லை, தரவாறடியே யாகும். (20)
|