யாப்பதிகாரம் | 461 | முத்துவீரியம் |
எழுத்தானந்தம்
1006. ஆனந்த மைவகை
யறையுங் காலை
எழுத்தி னிலைபிறழ்ந்
தனவெழுத் தானந்தம்.
என்பது, எழுத்தானந்தம்,
சொல்லானந்தம், பொருளானந்தம், யாப்பானந்தம்,
அணியானந்தமாம். அவற்றுள், எழுத்துநிலை பிறழ்ந்தன
எழுத்தானந்தம்.
(வ-று.)
ஆழி யிழைப்பப் பகல்போ
மிரவெல்லாந்
தோழி துணையாய்த் துயர்தீரும்-வாழி
நறுமாலைத் தாராய் திரையவோஒ வென்னுஞ்
செறுமாலை சென்றடைந்த போது.
இதனுள் திரையன் திரையஓ ஓஎன
அளபெடை எழுத்தானந்தம். (45)
சொல்லானந்தம்
1007. சொல்லா னந்தஞ் சொன்னிலை
பிறழ்ந்தன.
என்பது, சொன்னிலை பிறழ்ந்து
வருவன சொல்லானந்தம்.
(வ-று.)
என்னிற் பொலிந்த திவண்முகமென்
றெண்ணியே
தன்னிற் குறைபடுப்பான் றண்மதிய-மின்னி
விரிந்திலங்கு வெண்குடைச்
செங்கோல் விசயன்
எரிந்திலங்கு வேலி னெழும்.
இதனுள் விசயனெரிந்து எனச்
சொல்லானந்தம். (46)
பொருளானந்தம்
1008. பொருணிலை பிறழ்வன பொருளா
னந்தம்.
என்பது, பொருள்நிலை பிறழ்ந்து
வருவன பொருளானந்தம்.
(வ-று.)
வலிக்குமாம் மாண்டார் மனம்,
எனப் பொருளானந்தம். (47)
யாப்பானந்தம்
1009. யாப்பினிலை பிறழ்வன யாப்பா
னந்தம்.
|