யாப்பதிகாரம்463முத்துவீரியம்

     குருவே கிரகங் குழுமிய முல்லை
     இருநில மற்றத னியல்பென மொழிப.

என்பது, முற்கூறியவற்றுள், வெண்பா வெண்ணிறம்; கார்த்திகை முதலிய வேழும்
நாள்; விருச்சிகம் மீனம் இராசி, பிராமணகுலம், சந்திரன் வியாழம் கிரகம், முல்லைநிலம்.
(51)

அகவற்பாவிற்குரிய நாள், நிறம் முதலியன

1013. அகவல் செந்நிற மரைய குலமகம்
      பூர முதலிய வெழுநாண் மேடஞ்
      சிங்க விராசி செங்கதிர் செவ்வாய்
      கிரகங் குறிஞ்சி நிலனா கும்மே.

என்பது, அகவற்பா செந்நிறம், க்ஷத்திரியகுலம்; மகமுதலிய வேழும் நாள்; மேடம்
சிங்கம் தனுசு இராசி; சூரியன் செவ்வாய் கிரகம், குறிஞ்சிநிலம். (52)

கலிப்பாவிற்குரிய நாள், நிறம் முதலியன

1014. கலிபொன் னிறங்குலம் காமரு வணிகம்
     அகணி நெடுநில மனுட முதலிய
     ஆறுநாண் மிதுனங் கும்பந் துலாமும்
     இராசி புதன்சனி கிரகமென் றியம்புப.

என்பது, கலிப்பா பொன்னிறம், வணிககுலம், மருதநிலம்; அனுட முதலியவாறும்
நாள்; மிதுனம் கும்பம் துலாம் இராசி; புதன் சனி கிரகம். (53)

வஞ்சிப்பாவிற்குரிய நாள், நிறம் முதலியன

1015. வஞ்சி நிறங்கறுப்பு வாருதி நெய்தல்
     நிலங்கடைக் குலம் விட்டமுத லேழு
     நாளிட பங்கனி மகர மிராசி
     வெள்ளி யிராகு கிரக மென்ப.

என்பது, வஞ்சிப்பா கறுப்பு நிறம், நெய்தல் நிலம், சூத்திர குலம்; அவிட்ட
முதலிய வேழும் நாள்; இடபம் கன்னி மகரம் இராசி; வெள்ளி இராகு கிரகம். (54)