யாப்பதிகாரம்465முத்துவீரியம்

வித்தாரகவி

1020. மறங்கலி வெண்பா மடலூர்த லியலிசை
      பாசண் டத்துறை பன்மணி மாலை
      தசாங்க மும்மணிக் கோவை கிரீடை
      இவைமுத லியவிரித் திசைத்துப் பாடுவோன்
      வித்தா ரக்கவி யாம்விளம் பிடினே.

என்பது, மறம், கலிவெண்பா, மடலூர்தல், இயல், இசை, பாசண்டத் துறை,
பன்மணிமாலை, மும்மணிக்கோவை, கிரீடை இவை முதலியன பிறவும் விரித்துப்
பாடுவோன் வித்தாரக்கவி. (59)

கவிஞர்கள் நால்வர்

1021. கவியே கமகன் வாதி வாக்கியென்
      றிவையொரு நான்கும் புலமைக் கியல்பே.

என்பது, கவி, கமகன், வாதி, வாக்கி இவை நான்கும் புலமைக்கியல்பு. (60) 

கவி

1022. ஆசு மதுரஞ் சித்திரம் வித்தாரங்
      கண்டு பாடுவோன் கவியா கும்மே.

என்பது, ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரக்கவி அறிந்து பாடுவோன்
கவியாகும். (61)

கமகன்

1023. ஞாபகஞ் செம்பொரு ணடையினெப் பொருளும்
      அறைகுவோன் கமகனாம் வழுத்துங் காலே.

என்பது, ஞாபகம் செம்பொருணடையின் எப்பொருளையும் எடுத்துக் கூறுவோன்
கமகனாகும். (62)

வாதி

1024. ஏதுமேற் கோளு மெடுத்துக் காட்டித்
      தன்கோ ணிறீஇப் பிறன்கோண் மறுப்போன்
      வாதி யாமென வைக்கப் படுமே.