யாப்பதிகாரம் | 470 | முத்துவீரியம் |
எழுத்துக்களுக்குரிய கதிகள்
1036. அ, இ, உ, எ, வொடு க, ச, ட, த
பவாம்
ஒன்பதுந் தேவர் கதியாம் ஆ
ஊ, ஏ, நு, ஞ, ண, ந, ம, வா, மொன்பது
மாந்தர் கதி ஒ, ஓ, யரலழற
விலங்கின் கதிஐ, ஒளவொடு வளன
ஐந்து நரகர் கதியா மிவற்றுண்
முன்னவை நல்லன பின்னவை
தீயன.
என்பது, அ, இ, உ, எ, க, ச, ட, த, ப,
ஆகிய வொன்பதெழுத்தும் தேவர்கதி; ஆ,
ஈ, ஊ, ஏ,
ங, ஞ, ண, ந, ம, ஆகிய வொன்பதெழுத்தும்
மக்கட்கதி; ஒ, ஓ, ய, ர, ல, ழ,
ற, ஆகிய ஏழெழுத்தும் விலங்கின் கதி; ஐ, ஒள, வ, ள, ன,
ஆகிய ஐந்தெழுத்தும்
நரகர்கதி; இவற்றுள் முற்கூறிய தேவர்கதியும்,
மக்கள் கதியும் நல்லனவாம். பிற்கூறிய
விலங்கின் கதியும், நரகர் கதியும் தீயனவாம். (75)
காய்ச்சீர்,
கனிச்சீர்களுக்குரிய கணங்கள்
1037. தேமாங் காயிந் திரகணம்
புளிமாங்
காய்சந் திரகணங் கருவிள மென்கனி
நிலக்கணங் கூவிளங் கனிநீர்க்
கணமிவை
ஆகுங் கருவிளங் காயந்
தரகணங்
கூவிளங் காயிர விக்கணந் தேமாங்
கனிகாற் கணம்புளி மாங்கனி
தீக்கணம்.
என்பது, தேமாங்காய் இந்திரகணம்.
புளிமாங்காய் சந்திரகணம். கருவிளங்கனி
நிலக்கணம். கூவிளங்கனி நீர்க்கணம். இவை
நல்லனவாம். கருவிளங்காய் அந்தரகணம்.
கூவிளங்காய் சூரியகணம். தேமாங்கனி
வாயுக்கணம். புளிமாங்கனி தீக்கணம்
இவையாகாவாம். (76)
பிரபந்தங்கள்
(சிற்றிலக்கியங்கள்)
சாதகக் கவி
1038. ஓரை திதிநிலை யோகநாண்
மீனிலை
வாரங் கரண நிலைவரு கிரக
|