யாப்பதிகாரம் | 471 | முத்துவீரியம் |
நிலையெழு வவயவ நிலையையு
முணர்வுற்
றவற்றை யமைத்தவற் றாற்றலை
மகனுக்
கடைவன வறைதல்சா தகமென மொழிப.
என்பது, ஓரைநிலையும்,
திதிநிலையும், யோகநிலையும்,
நாண்மீனிலையும், வார
நிலையும், காணநிலையும், கிரகநிலையும், ஆகிய வேழுறுப்புகளி
னிலையையும்,
சோதிடநூலால் நன்குணர்ந்து, அவற்றை அமைத்து,
அவற்றால் தலைமகனுக்கு அடைவன
கூறல் சாதகக்
கவியாமென்க. (77)
பிள்ளைத் தமிழ்
1039. தீதில் காப்பே செங்கீரை
தாலே
சப்பாணி முத்தம் வாரானை
யம்புலி
சிறுபறை சிற்றில் சிறுதே
ரிவற்றை
முறையே யகவல் விருத்தத் தாலே
பப்பத் தாகப் பாடுவ தாண்பாற்
பிள்ளைக் கவியிவ் வுறுப்பினிற்
கடைமூன்
றொழித்துக் கழங்கம் மனையூச
லென்றிவை
கூட்டிமுற் கூறிய வாறுரைப் பதுவே
பெண்பாற் பிள்ளைக் கவியெனப்
படுமே.
என்பது, காப்பு, செங்கீரை,
தால், சப்பாணி, முத்தம் வாரானை, அம்புலி, சிறுபறை,
சிற்றில், சிறுதேர், இவற்றை முறையே, ஆசிரிய
விருத்தத்தால், பத்துப்பத்தாகக் கூறுவது
ஆண்பாற் பிள்ளைக்கவி யாகும். இவ்வுறுப்பினில்,
கடைமூன் றொழித்துக், கழங்கு,
அம்மனை, ஊசல் என்றிவற்றைக் கூட்டி, முற்கூறியவாறே
கூறுவது, பெண்பாற்
பிள்ளைக்கவியாகும், (78)
பரணி
1040. போர்முகத் தாயிரம்
புகர்முகக் களிற்றைக்
கொன்ற வனைத்தலை மகனாக்
கொண்டு
கடவுள் வாழ்த்துக் கடைதிறப்
புப்பாலை
காளி கோயிலும் பேயொடு காளியும்
காளியொடு பேய்களு முரைக்கத்
தானகஞ்
சாற்றக் கருதிய தலைவன்
சீர்த்தி
புலப்பட வவன்வழி யாகப்
புறப்பொருள்
தோன்றப் போர்த்தொழி
றொடங்க விரும்பல்
|